பெண் என்பதால் வேலை மறுப்பு! 63 வயது பெண்ணுக்கு ரூ. 12 லட்சம் இழப்பீடு! இந்தியன் ஆயிலுக்கு உத்தரவு! நிதாரி கொலை வழக்கில் விடுதலையான சுரேந்திர கோலி தற்கொலை! பாகிஸ்தானில் தொடரும் அவலம்! மசூதி அருகே வெடிகுண்டு தாக்குதலில் 15 பேர் பலி! தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை: இலங்கை நீதிமன்றம் உத்தரவு பஞ்சாபில் 16 மணி நேரம் மின்வெட்டு; தமிழகத்தில் மின் தட்டுப்பாடு இல்லை! நிர்மல் குமார் மாணவர் பாரதிதாசனுக்கு கல்வி நிதி விடுவிக்கப்படும்! - அமைச்சர் வன்னி அரசு

தனியார் தேங்காய் நார் மில் பேருந்து கவிழ்ந்து விபத்து: 8 பேர் காயம்

திருச்சி மாவட்டம், காட்டுப்புத்தூர் அருகே தனியாருக்கு சொந்தமான நார் மில் வேன் கவிழ்ந்து 8 தொழிலாளர்கள் காயமடைந்தனர். 

காட்டுப்புத்தூர் அருகே விபத்துக்குள்ளான தனியாருக்கு சொந்தமான நார் மில் வேன்.

Published On :

முசிறி: திருச்சி மாவட்டம், காட்டுப்புத்தூர் அருகே தனியாருக்கு சொந்தமான நார் மில் வேன் கவிழ்ந்து 8 தொழிலாளர்கள் காயமடைந்தனர். சம்பவம் தொடர்பாக காட்டுப்புத்தூர் போலீசார் சனிக்கிழமை வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனர்.

காட்டுப்புத்தூர் அருகே கிடாரம் பகுதியில் தனியாருக்கு சொந்தமான தேங்காய் நார் மில் இயங்கி வருகிறது.

இந்த மில்லில் தொட்டியம் காட்டுப்புத்தூர் மற்றும் சுற்றுவட்டார பகுதியில் இருந்து தொழிலாளர்கள் வேலைக்கு சென்று வருகின்றனர்.

இவ்வாறு வேலைக்கு செல்லும் தொழிலாளர்களை சம்பந்தப்பட்ட நிறுவனத்தின் மூலம் பேருந்தில் அழைத்து சென்று பணி முடிந்தவுடன் திரும்ப கொண்டுவந்து விடுவது வழக்கம். இவ்வாறு பணிக்கு சென்றுவிட்டு தொழிலாளர்களை ஏற்றிக் கொண்டு வந்த பேருந்து காடுவெட்டி அருகே ஓட்டுநர் சதீஷ்குமார் ( 38) என்பவரது கட்டுப்பாட்டை இழந்து சாலையோரத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.

இதில், பேருந்தில் பணிக்கு சென்றுவிட்டு திரும்பி வந்த கூன் ராக்கம்பட்டி சேர்ந்த  புவனேஸ்வரி, தொட்டியபட்டி சேர்ந்தவர்களான சந்திரா,சரசு, சத்யா, மஞ்சுளா, பெரும்மாமா, கங்கா, காசி ஆகிய 8 பேர் காயமடைந்தனர். 

காயமடைந்த அனைவரும் தொட்டியம் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது. இதில், சந்திரா, சரசு மஞ்சுளா, பெரும்மாமா ஆகிய 4 பேர் மேல் சிகிச்சைக்காக நாமக்கல் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டு அங்கு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இந்த சம்பவம் தொடர்பாக காட்டுப்புத்தூர் போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.