கொடநாடு வழக்கு: சசிகலா உறவினர் விவேக் ஜெயராமனிடம் விசாரணை
கொடநாடு கொலை, கொள்ளை வழக்கு தொடர்பாக கோவையில் சசிகலாவின் உறவினர் விவேக் ஜெயராமனிடம் தனிப்படை காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டனர்.
ஏற்கெனவே இதுவரை 30-க்கும் அதிகமானோரிடம் விசாரணை நடைபெற்ற நிலையில், கொடநாடு எஸ்டேட் உடன் தொடர்புடையவர் என்ற அடிப்படையில் விவேக் ஜெயராமனிடம் விசாரணை நடத்தப்பட்டது. இந்த விசாரணை சுமார் 3 மணிநேரத்திற்கு நடைபெற்றது.
வழக்கு தொடர்பான மேல் விசாரணைக்கு அவகாசம் குறைந்து வருவதால், விசாரணையை தனிப்படை காவல் துறையினர் தீவிரப்படுத்தியுள்ளனர்.
கொடநாடு கொலை, கொள்ளை வழக்கு தொடா்பாக சயன் மற்றும் கனகராஜ் உள்ளிட்ட 11 போ் மீது போலீஸாா் வழக்குப் பதிவு செய்தனா். இதில், கனகராஜ் சேலத்தில் விபத்தில் சிக்கி மரணமடைந்தாா். கொடநாடு கொலை, கொள்ளை சம்பவத்தில் மனோஜ் உட்பட 10 பேரும் தற்போது ஜாமீனில் உள்ளனா்.
இதில், உயிரிழந்த கனகராஜ் சகோதரா் தனபால், உறவினா் ரமேஷ் ஆகிய இருவரை தனிப்படை போலீஸாா் கைது செய்தனா்.
கடந்த சில நாள்களுக்கு முன் தனபால் மற்றும் ரமேஷை போலீஸாா் காவலில் எடுத்து விசாரணை மேற்கொண்டனா்.
இரண்டாவது முறையாக நடராஜிடம் தனிப்படை போலீஸாா் கோவை காவலா் பயிற்சிப் பள்ளியில் விசாரணை மேற்கொண்டனா்.
இந்நிலையில், கொடநாடு எஸ்டேட்டுடன் தொடர்புடையவர், என்ற பெயரில் சசிகலாவின் உறவினர் விவேக் ஜெயராமனிடம் தனிப்படை காவலர்கள் விசாரணை மேற்கொண்டனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.