2 நாள்களில் திமுக - தேமுதிக தொகுதிப் பங்கீடு! எல்.கே. சுதீஷ்திமுக, அதிமுக இல்லாத கூட்டணி? ராமதாஸுடன் சசிகலா சந்திப்பு2 நாள்களில் திமுக - தேமுதிக தொகுதிப் பங்கீடு! எல்.கே. சுதீஷ்நாட்டின் கோதுமை உற்பத்தி 2% அதிகரிப்பு! 120 மில்லியன் டன் - மத்திய அரசுசௌதிக்குச் செல்ல மேற்காசியாவில் உள்ள நேபாள மக்களுக்கு அந்நாட்டு அரசு அறிவுறுத்தல்இண்டிகோ விமான நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி பீட்டர்ஸ் எல்பர்ஸ் ராஜிநாமாபாகிஸ்தானில் அறிமுகமாகும் 5ஜி: அலைக்கற்றை ஏலம் முடிந்தது!
/

திருவொற்றியூர் கட்டட விபத்து: மாற்று வீடு, நிவாரணம் அறிவித்தார் முதல்வர்

திருவொற்றியூரில் குடிசைமாற்று வாரியத்தின் அடுக்குமாடி குடியிருப்புக் கட்டடம் இடிந்து விழுந்த விபத்தில், பாதிக்கப்பட்ட 24 குடும்பங்களுக்கும் தலா ரூ.1 லட்சம் நிவாரணம் அறிவித்துள்ளார் தமிழக முதல்வர் மு.க

News image
திருவொற்றியூர் கட்டட விபத்து: மாற்று வீடு, நிவாரணம் அறிவித்தார் முதல்வர்
Updated On :27 டிசம்பர் 2021, 7:28 am

DIN

சென்னை: திருவொற்றியூரில் குடிசைமாற்று வாரியத்தின் அடுக்குமாடி குடியிருப்புக் கட்டடம் இடிந்து விழுந்த விபத்தில், பாதிக்கப்பட்ட 24 குடும்பங்களுக்கும் தலா ரூ.1 லட்சம் நிவாரணம் அறிவித்துள்ளார் தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின்.

மேலும், குடிசைமாற்று வாரியத்தின் அடுக்குமாடிக் குடியிருப்பில் வசித்து வந்த 24 குடும்பங்களுக்கும் மாற்று வீடுகள் வழங்கப்படும் என்றும், சம்பவ இடத்தில் மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளில் அமைச்சர் தா.மோ. அன்பரசன் ஈடுபடுவார் என்றும் மு.க. ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

சென்னையை அடுத்த திருவொற்றியூரில், 1993ஆம் ஆண்டு கட்டப்பட்ட அடுக்குமாடிக் குடியிருப்புக் கட்டடம் இன்று காலை முழுமையாக இடிந்து விழுந்து சேதமடைந்ததது. பழைய குடியிருப்பில் வசித்து வந்தவர்களின் விவரங்களை சேகரித்து, அவர்களுக்கு மாற்று வீடுகள் வழங்கப்படும் என்றும் ஸ்டாலின் கூறியுள்ளார்.

சென்னையை அடுத்த திருவொற்றியூரில் இருந்த குடிசை மாற்று வாரிய குடியிருப்பு திடீரென இடிந்து விழுந்து விபத்துக்குள்ளானது.

இந்த குடியிருப்பில், இரவு நேரத்தில் திடீரென பெரிய சத்தம் கேட்டு, கட்டடத்தில் விரிசல் விழுந்துள்ளது. இதையடுத்து, பொதுமக்கள் அனைவரும் தங்களது வீடுகளிலிருந்து வெளியேறிய நிலையில், குடிசைமாற்று வாரிய குடியிருப்பு இன்று காலை 10.30 மணியளவில் இடிந்து விழுந்துள்ளது. இதனால் பெரிய அளவில் உயிர் சேதம் தவிர்க்கப்பட்டதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

எனினும், கட்டட இடிபாடுகளில் யாரேனும் சிக்கியிருக்கிறார்களா என்று தேடுதல் பணியும் நடைபெற்று வருகிறது.

திருவொற்றியூரில், கிராமத் தெருவில் அரிவாக்குளம் குடிசை மாற்று வாரிய குடியிருப்பு இடிந்து விழுந்து தரைமட்டமாகியுள்ளது.  வீடுகளை இழந்தவர்களுக்கு தமிழக முதல்வர் நிவாரணத் தொகை அறிவித்துள்ளார்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.