கடலூரில்  சுமார் முக்கால் மணி நேரமாக பெய்து வரும் மழை.
கடலூரில்  சுமார் முக்கால் மணி நேரமாக பெய்து வரும் மழை.

கடலூரில் மிதமான மழை

கடலூரில் 1 மணிக்கு லேசான தூறலுடன் தொடங்கிய மழை பின்னர் வலுவடைந்து சுமார் முக்கால் மணி நேரத்தை கடந்தும் பெய்து வருகிறது. 

கடலூர்: கடலூரில் 1 மணிக்கு லேசான தூறலுடன் தொடங்கிய மழை பின்னர் வலுவடைந்து சுமார் முக்கால் மணி நேரத்தை கடந்தும் பெய்து வருகிறது. 

தமிழகத்தை நோக்கி வளிமண்டல சுழற்சி நகர்ந்து வருவதால் கடலோர மாவட்டங்களில் இன்று மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை தகவல் தெரிவிக்கப்பட்டிருந்தது. 

அதன்படி, கடலூரில் இன்று மதியம் சுமார் 1 மணிக்கு லேசான தூறலுடன் தொடங்கிய மழை பின்னர் வலுவடைந்து பெய்யத் தொடங்கியது. சுமார் முக்கால் மணி நேரத்தை கடந்தும் பெய்துக் கொண்டே இருக்கிறது. 

இதற்கிடையில், அதிகாலை நேரத்தில் கடலூர், புவனகிரி, குறிஞ்சிப்பாடி, சேத்தியாத்தோப்பு, பரங்கிப்பேட்டை மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் மழை பெய்தது. திடீர் மழை காரணமாக குளுமையான காலநிலை நிலவியது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

X
Dinamani
www.dinamani.com