அரசு அலுவலகங்களில் மாற்றுத்திறனாளிகளுக்கு அடிப்படை வசதிகள் அமைக்கக் கோரி மனு
அரசு அலுவலகங்களில் மாற்றுத்திறனாளிகள் அணுகும் வகையில் கழிவறை, குடிநீர் வசதிகளை அமைக்கக் கோரி உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டுள்ளது.


அரசு அலுவலகங்களில் மாற்றுத்திறனாளிகள் அணுகும் வகையில் கழிவறை, குடிநீர் வசதிகளை அமைக்கக் கோரி உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்குரைஞர் கற்பகம் தாக்கல் செய்த மனுவில், காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள வேளாண்துறை அலுவலகத்தில் பணியாற்றிய மாற்றுத்திறனாளி ஊழியர் சரண்யா, இயற்கை உபாதையை கழிக்க சென்ற போது, அருகி இருந்த கழிவுநீர் தொட்டியில் விழுந்து உயிரிழந்தார்.
அரசு அலுவலகங்களில் மாற்றுத்திறனாளிகளுக்கு தேவையான வசதிகளை ஏற்படுத்திக் கொடுக்க வகை செய்யும் சட்டம் 1995-ஆம் ஆண்டு இயற்றப்பட்டது. அந்த சட்டம் கடந்த 25 ஆண்டுகளாக காகித அளவிலேயே உள்ளது. கழிவுநீர் தொட்டியில் விழுந்து உயிரிழந்த சரண்யாவுக்கு இதுவரை இழப்பீடோ, அவரது குடும்பத்தினருக்கு அரசு வேலையோ இதுவரை வழங்கப்படவில்லை.
எனவே சரண்யாவின் குடும்பத்தினருக்கு இழப்பீடு வழங்கவும், வேலை வழங்கவும் உத்தரவிட வேண்டும். அனைத்து மாவட்டங்களிலும், அரசு அலுவலகங்களின் நிலை குறித்து ஆய்வு செய்து அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட வேண்டும். அனைத்து அரசு அலுவலகங்களிலும் கழிவறை, குடிநீர் வசதிகள் மாற்றுத் திறனாளிகள் அணுகும் வகையில் அமைக்க உத்தரவிட வேண்டும் என கோரியிருந்தார்.
இந்த வழக்கு தலைமை நீதிபதி சஞ்சீவ் பானர்ஜி, நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி ஆகியோர் அடங்கிய அமர்வு முன் விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதிகள் விசாரணையை 4 வாரங்களுக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...