திருச்சி மத்திய பேருந்து நிலையம் அருகே மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட மாற்றுத்திறனாளிகள்.
திருச்சி மத்திய பேருந்து நிலையம் அருகே மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட மாற்றுத்திறனாளிகள்.

திருச்சி மத்திய பேருந்து நிலையம் அருகே மாற்றுத்திறனாளிகள் மறியல்: 30 பேர் கைது 

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி திருச்சி மத்திய பேருந்து நிலையம் அருகேபுதன்கிழமை மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட மாற்றுத்திறனாளிகள் 30 பேர் கைது செய்யப்பட்டனர்.  

திருச்சி:  பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி திருச்சி மத்திய பேருந்து நிலையம் அருகே புதன்கிழமை மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட மாற்றுத்திறனாளிகள் 30 பேர் கைது செய்யப்பட்டனர்.  

தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான நலச்சங்கத்தின் சார்பில் இரண்டாவது நாளாக புதன்கிழமை மறியல் போராட்டம் நடைபெற்றது. திருச்சி மத்திய பேருந்து நிலையம் அருகில் நடைபெற்ற போராட்டத்திற்கு மாவட்ட துணைத் தலைவர் ஜெயபால் தலைமை வகித்தார். 

மாற்றுத்திறனாளிக்கு மாதம் ரூ.3000 நிவாரணத் தொகை வழங்க வேண்டும், கடும் ஊனமுற்றோருக்கு மாதம் ரூ. 5 ஆயிரம் வழங்க வேண்டும், தனியார் வேலைவாய்ப்பில் இட ஒதுக்கீடு அளிக்கும் சிறப்பு சட்டம் இயற்ற வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டம் நடைபெற்றது.

ஏற்கனவே, செவ்வாய்க்கிழமை நான்கு இடங்களில் குடியேறும் போராட்டம் நடத்தியவர்கள், இரண்டாவது நாளாக மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். தடையை மீறி போராட்டத்தில் ஈடுபட்டதாக அனைவரையும் போலீசார் கைது செய்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com