புது தில்லி: தமிழகத்தில் நேரிட்ட இயற்கை பேரிடர்களான புரெவி புயல் மற்றும் நிவர் புயல் பாதிப்புகளுக்கு தேசிய பேரிடர் நிவாரண நிதியிலிருந்து ரூ.286.91 கோடியை மத்திய அரசு ஒதுக்கீடு செய்துள்ளது.
மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தலைமையில் புது தில்லியில் இன்று உயர்நிலை குழுக் கூட்டம் நடைபெற்றது.
தேசிய பேரிடர் நிவாரண நிதியின் கீழ் 2020-ஆம் வருடம்
வெள்ளம்/ புயல் (நிவர் மற்றும் புரெவி)/ பூச்சிகளின் தாக்குதலால்
பாதிக்கப்பட்ட தமிழகம், புதுச்சேரி, ஆந்திரப் பிரதேசம், பிகார் மற்றும்
மத்திய பிரதேச மாநிலங்களுக்கு தேசிய பேரிடர் நிவாரண
மேலாண்மை நிதியிலிருந்து கூடுதலாக ரூ. 3,113.05 கோடியை அளிக்க
இந்தக் கூட்டத்தில் ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது.
இதில், தமிழகத்துக்கு நிவர் மற்றும் புரெவி புயல் பாதிப்புகளுக்கு ரூ.286.91 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. இந்த தொகையில், நிரவி புயல் பாதிப்புக்கு ரூ.63.14 கோடியும் புரெவி பயுல் பாதிப்புக்கு ரூ.223.77 கோடியும் ஒதுக்கப்பட்டுள்ளது.
2020 தென்மேற்கு பருவமழை காலத்தில் ஏற்பட்ட வெள்ளத்தால்
பாதிக்கப்பட்ட ஆந்திரப் பிரதேசத்திற்கு ரூ. 280.78 கோடியும், வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பிகார் மாநிலத்திற்கு ரூ. 1,255.27
கோடியும், காரீப் பருவகாலத்தின் போது பூச்சிகளின் தாக்குதலால்
பாதிக்கப்பட்ட மத்திய பிரதேசத்திற்கு ரூ. 1,280.18 கோடியும் வழங்க
உயர்மட்ட குழு ஒப்புதல் அளித்துள்ளது.
மேலும் 2020-21 நிதியாண்டில் மாநில பேரிடர் நிவாரண நிதியிலிருந்து
28 மாநிலங்களுக்கு இதுவரை ரூ. 19,036.43 கோடியையும், தேசிய
பேரிடர் மேலாண்மை நிவாரண நிதியிலிருந்து ரூ. 4,409.71
கோடியையும் மத்திய அரசு வழங்கியுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்

"Global Friend" எப்ஸ்டீன் படம் கொண்ட பதாகையுடன் எதிர்க்கட்சி எம்.பி.க்கள் போராட்டம்! | Parliament

பிகாரில் நக்சல் கைது! ஆயுதங்கள் பறிமுதல்!

ஜார்க்கண்ட்: இருசக்கர வாகனம் - கார் மோதியதில் 4 சிறுவர்கள் பலி

இந்தித் திணிப்புக்கு எதிராக உழைப்பைக் கொடுங்கள்; உயிரை அல்ல! முதல்வர் வேண்டுகோள்
வீடியோக்கள்

Dinamani வார ராசிபலன்! | March 15 முதல் 21 வரை! | ஜோதிடரத்னா ராமராமாநுஜதாஸன்! | Weekly Horoscope
தினமணி வீடியோ செய்தி...

Valaipechu Anthanan Interview | விஜய்யிடம் இப்போது மனமாற்றம்.. | TVK Vijay | Vijay Trisha issue
தினமணி வீடியோ செய்தி...

சட்டென்று மாறுது வானிலை பாடல்!
தினமணி வீடியோ செய்தி...

"உங்க கனவு நிறைவேறியாச்சு! இனி மக்கள் கனவை நினைவாக்குங்கள்!": MK Stalin Speech | DMK
தினமணி வீடியோ செய்தி...

