கம்பம்: தேனி மாவட்டம் கம்பத்தில் உள்ள யோகா ஆசிரியர்களுக்கு சுவாமி தயானந்த குருகுலம், ஸ்ரீ சாய் சேவா அறக்கட்டளை இணைந்து வாழ்நாள் சாதனையாளர் விருதுகளை வழங்கினர்.
தேனி மாவட்டம் கம்பத்தைச் சேர்ந்தவர்கள் யோகா ஆசிரியர்கள் துரை. ராஜேந்திரன், யோகா ரவிராம். இவர்கள் கடந்த 30 ஆண்டுகளாக பள்ளி மாணவ மாணவியர், மூத்த குடி மக்கள், சமூக ஆர்வலர்கள் மற்றும் காவல்துறையினருக்கு யோகா, தியானம், மூச்சுப் பயிற்சி போன்றவற்றை இலவசமாக வழங்கி வருகின்றனர்.
இவர்களைப் பாராட்டி பழனியைச் சேர்ந்த சுவாமி தயானந்த குருகுலம், ஓம் ஸ்ரீ சாய் சேவா அறக்கட்டளையும் இணைந்து வாழ்நாள் சாதனையாளர் விருதுகளை வழங்கி பரிந்துரைத்தனர்.
ஸ்ரீ மத் போகர் பழனி ஆதினம் சித்தர் புலிப்பாணி சுவாமிகள், ஆனைமலை வித்யா பீடம் ஸ்ரீ ததேவானந்த் சரஸ்வதி சுவாமிகள், பழனி மெய்த்தவ பொற்சபையைச் சேர்ந்த மெய்த்தவ அடிகளும், வாழ்நாள் சாதனையாளர் விருதுகளையும், சான்றிதழ்களையும் சனிக்கிழமை வழங்கி பாராட்டு தெரிவித்தனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.










