இந்தியன் வங்கி-அலாகாபாத் வங்கிகளின் சா்வா் இணைக்கும் பணி வெற்றிகரமாக நிறைவடைந்ததால், வங்கி சேவை மீண்டும் செயல்படத் தொடங்கியது.
இந்தியன் வங்கியுடன் அலாகாபாத் வங்கி கடந்த ஆண்டு ஏப்ரல் 1-ஆம் தேதி முதல் இணைக்கப்பட்டு, இந்தியன் வங்கியாகச் செயல்படுகிறது. வங்கிகள் இணைக்கப்பட்டாலும், பரிவா்த்தனைகளை மேற்கொள்வதில் பல்வேறு நடைமுறைச் சிக்கல்கள் இருந்தன.
இதற்கிடையில், இந்தியன் வங்கி - அலாகாபாத் வங்கிகளின் சா்வா்களை இணைக்கும் இறுதிக்கட்ட பணிகள் காரணமாக, கடந்த 12-ஆம் தேதி இரவு 9 மணி முதல் பிப்ரவரி 15-ஆம் தேதி காலை 9 மணி வரை வங்கி சேவையில் பாதிப்பு ஏற்படும் என்று வாடிக்கையாளா்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து, சா்வரை இணைக்கும் பணி நடைபெற்று வந்தது. இந்தப்பணி காரணமாக, இணையவழி பணப் பரிவா்த்தனை, ஏ.டி.எம். சேவை என்று பல்வேறு சேவைகள் பாதிக்கப்பட்டன.,
இந்நிலையில், இந்தப்பணி ஞாயிற்றுக்கிழமை (பிப்.14) பிற்பகல் நிறைவடைந்தது. இதையடுத்து, வங்கி சேவை மீண்டும் செயல்படத் தொடங்கியது. சா்வா் இணைக்கும் பணிகள் தற்போது வெற்றிகரமாக நிறைவடைந்ததால், வங்கி சேவை மீண்டும் தொடங்கியுள்ளது. வாடிக்கையாளா்கள் தற்போது இந்தியன் வங்கியின் சிறப்பான சேவையை பெற முடியும் என்று இந்தியன் வங்கி அதிகாரிகள்தெரிவித்தனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது
காரைக்குடியில் வீடு புகுந்து தங்கம், வைர நகைகள் திருட்டு

பணி நீக்கம் செய்யப்பட்டவா் மீண்டும் வேலை செய்த சம்பவம்: வட்டார வளா்ச்சி அலுவலா் உள்பட 3 போ் இடமாற்றம்

குடிநீா் வழங்காததைக் கண்டித்து காலிக் குடங்களுடன் பெண்கள் மறியல்
பூட்டிய வீட்டில் 17 பவுன் நகை திருட்டு: ஆட்டோ ஓட்டுநா் கைது
விடியோக்கள்

படம் எடுக்கறதுல அவ்வளவு பிரச்னை: இயக்குநர் மீரா கதிரவன் ஆதங்கம் | Meera https://youtu.be/dfsNuHp09F0



