சசிகலாவின் தென்னந்தோப்பு சின்னத்தை இதற்கு முன் வைத்திருந்த கட்சி?சிலிண்டர் தட்டுப்பாடு! கவலையில் கேட்டரிங் நிறுவனங்கள்!இந்திய ரூபாயின் மதிப்பு 92.44 ஆகச் சரிவு!எரிபொருள் தட்டுப்பாடு! எதிர்க்கட்சிகள் அமளியால் மக்களவை ஒத்திவைப்பு!அதிமுகவில் இணைந்தார் காளியம்மாள்! மாநில அந்துஸ்து தராவிட்டால் கூட்டணி இல்லை! பாஜகவுக்கு என்.ஆர். காங்கிரஸ் அழுத்தம்?எரிபொருள் தட்டுப்பாடு! 17 கோடி பீப்பாய் கச்சா எண்ணெய் விடுவித்தது அமெரிக்கா!தென் மாவட்டங்களில் இன்றுமுதல் ஓபிஎஸ் பிரசாரம்!வேளச்சேரி - பரங்கிமலை இடையே பறக்கும் ரயில் சேவை: நாளை முதல் தொடக்கம்
/

எடப்பாடி அருகே மகளை கழுத்தை அறுத்து கொலை செய்த தந்தை தற்கொலை

எடப்பாடி அருகே பெற்ற மகளை கழுத்தை அறுத்து கொலை செய்த தந்தை, வீட்டு மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

News image
கொலை செய்யப்பட்ட பிரியா, தற்கொலை செய்துகொண்ட கோபால்
Updated On :19 பிப்ரவரி 2021, 9:38 am

DIN

எடப்பாடி:  எடப்பாடி அருகே பெற்ற மகளை கழுத்தை அறுத்து கொலை செய்த தந்தை, வீட்டு மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

எடப்பாடி காவல் நிலைய எல்லைக்கு உள்பட்ட, தாதாபுரம் ஊராட்சி, ஆதிக்காட்டூர் கிராமத்தை சேர்ந்த காய்கறி வியாபாரி கோபால்(54), இவரது மனைவி  மணி கரும்பு வெட்டும் கூலித்தொழிலாளி , இத்தம்பதிகளுக்கு பிரியா(15) என்ற மகளும், கண்ணன் என்ற மகனும் உள்ளனர், மணி கரும்பு வெட்டும் பணிக்காக வெளியூரில் தங்கி வேலைபார்த்து வந்தார். அவரது மகன் கண்ணன் வெளியூரில் உள்ள பேக்ரிக்கடையில் தங்கி பணிபுரிந்து வந்தார். கோபால் தள்ளுவண்டி மூலம் அப்பகுதியில் உள்ள குடியிருப்புகளில் காய்கறி வியாபாரம் செய்து வந்துள்ளார்.

மகள் பிரியா, அருகில் உள்ள அரசு பள்ளியில் 10 ஆம் வகுப்பு படித்து வந்துள்ளார். கோபாலின் மனைவி மணி மற்றும் சகோதரர் கண்ணன் ஆகியோர் வெளியூரில் தங்கி வேலைசெய்து வந்த நிலையில், கோபால் தனது மகள் பிரியாவுடன், ஆதிகாட்டூர் பகுதியில் உள்ள தனது வீட்டில் வசிந்து வந்தநிலையில், வியாழன் இரவு, மகள் பிரியாவுடன் கோபால் வாக்குவாதத்தில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது. 

Story image

மகளை கழுத்தை அறுத்து கொலைசெய்த தந்தை, மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்துகொண்ட வீடு

இந்நிலையில், வெள்ளிக்கிழமைஅதிகாலை கோபால் தனது வீட்டின் முன் பலத்த காயத்துடன் இறந்து கிடந்துள்ளார். அருகில் வசிப்பவர்கள் வீட்டினுள் சென்ற பார்த்தபோது, அங்கு கோபாலின் மகள் பிரியா படுகாயத்துடன் இறந்து கிடந்ததும், அவர் அருகில் சிறிய கத்தி மற்றும் சுத்தியல் இருப்பதையும் கண்டு அதிர்ச்சி அடைந்தனர். 

பொதுமக்கள் அளித்த தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு  விரைந்து  வந்த எடப்பாடி போலீஸார், இரு உடல்களையும் கைப்பற்றி விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். போலீஸாரின் முதற்கட்ட விசாரணையில், கோபால் அடிக்கடி மனநலம் பாதிக்கப்பட்டவர் 
போல் நடந்துகொள்வார் என கூறப்படுகிறது. 

தனது மகளை கொலை செய்த கோபால் தானும் தற்கொலை செய்து கொண்டாரா? அல்லது அவர்களின் இறப்பில் வேறு ஏதேனும் காரணங்கள் உள்ளதா? போலீஸார் தொடர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.  உடல்களை பிரேத பரிசோதனைக்கு அனுப்பிய எடப்பாடி போலீஸார்
கோபாலின் நெருங்கிய உறவினர்களிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 

மேலும் கொலை நடந்த இடத்தை நேரில் பார்வையிட்ட சங்ககிரி காவல் துணைகண்காணிப்பாளர் ரமேஷ் மற்றும் ஆய்வாளர் செந்தில் உள்ளிட்ட காவல்துறை அலுவலர்கள் அப்பகுதியில் முகாமிட்டுள்ளனர். கொலை நடந்த பகுதிக்கு போலீஸ் மோப்ப நாய் வரவழைக்கப்பட்டுள்ளது. 

கொலை செய்யப்பட்ட பிரியா, தற்கொலை செய்துகொண்ட கோபால் உடல்கள் மற்றும் கொலைக்கருவி , கோபால் குடியிருந்துவந்த வீடு

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.