புதுச்சேரியில் பள்ளிகளுக்கு நாளை விடுமுறை
தொடர் கனமழை காரணமாக புதுச்சேரியில் நாளை பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.


புதுச்சேரியில் தொடர் கனமழை காரணமாக நாளை பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
தொடர் கனமழையால் புதுச்சேரி பகுதியில் செயல்படும் அரசு மற்றும் தனியார் பள்ளகளில் உள்ள 1 முதல் 9-ஆம் வகுப்புகளுக்கு மட்டும் திங்கள்கிழமை (பிப். 22) விடுமுறை விடப்பட்டுள்ளது.
இதற்கான அறிவிப்பை புதுச்சேரி பள்ளிக் கல்வித்துறை இணை இயக்குநர் மைக்கேல் பென்னோ வெளியிட்டுள்ளார்.
புதுச்சேரியில் நேற்று (பிப்.20) முதல் தொடர் கனமழை பெய்து வருவதால், முக்கிய சாலைகளில் தண்ணீர் தேங்கியுள்ளது. பல்வேறு இடங்களில் மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளதால், மக்களின் இயல்பு வாழ்க்கையும் பாதிக்கப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...