ஹெச்டிஎஃப்சி வங்கி தலைவர் அதானு சக்ரவர்த்தி திடீர் ராஜிநாமா!பங்குச்சந்தைகள் கடும் வீழ்ச்சி! ரூ. 13 லட்சம் கோடி இழப்பு!தங்கம் விலை ஒரேநாளில் ரூ. 5,360 குறைந்தது! ஒரு கிராம் ரூ. 13,900 ஆகச் சரிவு!விளாத்திகுளம் சிறுமி பாலியல் கொலை குற்றவாளி கைது!விளாத்திகுளம் சிறுமி பாலியல் கொலை! குற்றவாளி கைது! தொடரும் இழுபறி! பியூஷ் கோயல் வருகை ரத்து! இபிஎஸ் தில்லி பயணம்! திமுகவில் இணைந்தார் ரஞ்சனா நாச்சியார்! திராவிட உடன்பிறப்புகள்! முதல்வர் ஸ்டாலின் உகாதி வாழ்த்து! இந்தியா - பாகிஸ்தான் இடையே அணு ஆயுத மோதல் அபாயம்: அமெரிக்க உளவுத்துறைதங்கம் விலை சவரனுக்கு ரூ. 2,160 குறைவு!
/

ஜெயலலிதா பிறந்தநாள்: முதல்வர், துணை முதல்வர் மரியாதை

மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் 73-ஆவது பிறந்தநாளை முன்னிட்டு சென்னை அதிமுக தலைமை அலுவலகத்தில் உள்ள அவரது சிலைக்கு முதல்வர் பழனிசாமி, துணை முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் உள்ளிட்டோர் மரியாதை செலுத்தினர்.

News image
ஜெயலலிதா பிறந்தநாள்: முதல்வர், துணை முதல்வர் மரியாதை
Updated On :24 பிப்ரவரி 2021, 10:24 am

DIN

மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் 73-ஆவது பிறந்தநாளை முன்னிட்டு சென்னை அதிமுக தலைமை அலுவலகத்தில் உள்ள அவரது சிலைக்கு முதல்வர் பழனிசாமி, துணை முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் உள்ளிட்டோர் மரியாதை செலுத்தினர்.

முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் 73-ஆவது பிறந்தநாளை முன்னிட்டு அதிமுக அலுவலகத்தில் பிறந்தநாள் விழா சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது. நிகழ்ச்சியில், ஏராளமான அமைச்சர்கள், அதிமுக நிர்வாகிகள், தொண்டர்களும் கலந்து கொண்டனர்.

Story image

காலை 10 மணிக்கு, சென்னை, ராயப்பேட்டை, அவ்வை சண்முகம் சாலை, தலைமைக்கழக வளாகத்தில் அமைந்துள்ள ஜெயலலிதா திருவுருவச் சிலைக்கு, தமிழக முதல்வர் பழனிசாமி, துணை முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் ஆகியோர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். பின்னர். கட்சிக் கொடியினை ஏற்றிவைத்து, இனிப்பு வழங்கினர்.

பின்னர் முதல்வரும் துணை முதல்வரும் ``நமது புரட்சித் தலைவி அம்மா நாளிதழ்’’ சார்பில் தயார் செய்யப்பட்டுள்ள ``ஜெயலலிதாவின் 73-ஆவது பிறந்த நாள் விழா சிறப்பு மலரை’’ வெளியிட்டனர்.

இந்நிகழ்ச்சியில், அதிமுக நிர்வாகிகளும், அமைச்சர் பெருமக்களும், மாவட்டக் செயலாளர்களும், நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்களும்; முன்னாள் அமைச்சர்களும், முன்னாள் நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்களும் பங்கேற்றுள்ளனர்.

Story image

ஜெயலலிதாவின் 73வது பிறந்தநாளை முன்னிட்டு 73 கிலோ கேக்கை வெட்டி முதல்வரும், துணை முதல்வரும் ஒருவருக்கு ஒருவர் ஊட்டினர். 

Story image

ஜெயலலிதாவின் பிறந்தநாளை முன்னிட்டு, தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் அதிமுக சார்பில் விருப்ப மனு விநியோகம் இன்று தொடங்கி வைக்கப்பட்டது.

Story image

தமிழக முதல்வர் பழனிசாமி இன்று முகாம் அலுவலகத்தில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் திருவுருவப் படத்துக்கு மலர்தூவி மரியாதை செலுத்தினார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.