மார்ச் 7-ல் திமுக பொதுக்குழு கூட்டம்
திமுக பொதுக்குழு கூட்டம் வரும் மார்ச் 7ஆம் தேதி நடைபெறும் என அக்கட்சியின் பொதுச்செயலர் துரைமுருகன் அறிவித்துள்ளார்.


திமுக பொதுக்குழு கூட்டம் வரும் மார்ச் 7ஆம் தேதி நடைபெறும் என அக்கட்சியின் பொதுச்செயலர் துரைமுருகன் அறிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் விடுத்துள்ள அறிக்கையில், தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் 7-3-2021 ஞாயிற்றுக்கிழமை காலை 10.00 மணியளவில் தி.மு.க. பொதுக்குழுக் கூட்டம், சென்னை, கொட்டிவாக்கம், பழைய மாமல்லபுரம் (டீ.ஆ.சு.) சாலை, ஒய்.எம்.சி.ஏ. திடலில் உள்ள அரங்கத்தில் நடைபெறும்.
அதுபோது பொதுக்குழு உறுப்பினர்கள் அனைவரும் தவறாது கலயது கொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறேன். இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார். பொதுக்குழுவில் தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் குறித்து ஆலோசிக்க உள்ளனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...