அரசுப் பள்ளிகளில் 11,773 பயிற்றுநர்களுக்கு மாத தொகுப்பூதியம் ரூ. 2,500 உயர்வு - அரசாணை வெளியீடுமேற்காசியா, வளைகுடாவில் போர்ச் சூழல் - இந்தியாவின் முட்டை ஏற்றுமதி முடக்கம்தமிழ்நாடு காங். கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகையின் மகள் நிச்சயதார்த்த விழாவில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பங்கேற்புவேளச்சேரி - பரங்கிமலை பறக்கும் ரயில் வழித்தடத்தில் மார்ச் 5 சோதனை ஓட்டம்திருமலையில் சந்திர கிரகணத்துக்குப்பின் மீண்டும் நடை திறப்பு: பக்தர்களுக்கு அனுமதி!மாநிலங்களவைத் தேர்தலில் தேமுதிகவுக்கு 1 இடம் ஒதுக்கீடு: திமுகவுடன் சுமூக உடன்பாடுமாநிலங்களவை உறுப்பினர் பதவிக்கு பாஜக தலைவர் நிதின் நவீன் போட்டி! இந்தியாவில் 25 நாள்களுக்கான கச்சா எண்ணெய், பெட்ரோல், டீசல் இருப்பு!மேற்கு ஆசிய பதற்றம்: கடந்த 48 மணிநேரத்தில் 8 நாடுகளின் தலைவர்களுடன் பிரதமா் மோடி ஆலோசனை!ஈரானில் நடான்ஸ் அணுசக்தி மையம் மீதும் தாக்குதல் - உறுதிசெய்த ஐஏஇஏஈரான் எந்தவொரு அணு ஆயுத தயாரிப்பிலும் ஈடுபடவில்லை - ரஷியா திட்டவட்டம்!பாகிஸ்தானுடன் தீவிர சண்டை - ஆப்கானிஸ்தானில் 42 பேர் பலி!நான்குநேரி கொலைச் சம்பவம்: 5 தனிப்படைகள் அமைத்து விசாரணை!ஈரானை உலுக்கிய நிலநடுக்கம்! மேலும் அதிகரிக்கும் பதற்றம்!அமெரிக்கா - இஸ்ரேல் தாக்குதலில் ஈரானில் 787 பேர் கொலை!
/

துணை முதல்வருடன் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சித் தலைவர்கள் சந்திப்பு

கூவம் கரையோரம் குடியிருந்த மக்களை சென்னை நகருக்குள்ளேயே குடியமர்த்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்தை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சித் தலைவர்கள் இன்று சந்தித்து

News image
Updated On :1 ஜனவரி 2021, 2:33 pm

DIN

கூவம் கரையோரம் குடியிருந்த மக்களை சென்னை நகருக்குள்ளேயே குடியமர்த்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்தை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சித் தலைவர்கள் இன்று சந்தித்து வலியுறுத்தினர். 

இதுகுறித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் கே. பாலகிருஷ்ணன் வெளியிட்ட அறிக்கையில், சென்னை மாநகராட்சி 55ஆவது வட்டம் தீவுத்திடல் எதிரில் கூவம் கரையோரம் குடியிருந்த மக்களை ஆக்கிரமிப்பாளர்கள் என அரசு வகைப்படுத்தி சென்னைக்கு அப்பால் 40 கிலோமீட்டர் தள்ளி பெரும்பாக்கத்தில் குடியமர்த்தி வருகிறது. இத்தகைய செயல்பாடுகளை எதிர்த்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கடந்த பல ஆண்டுகளாக பல்வேறு இயக்கங்களை நடத்தி வருகிறது. கரையோரம் குடியிருந்த மக்களை அப்புறப்படுத்தும் போது அவர்கள் வாழ்ந்த இடத்திலோ அல்லது மூன்று கிலோமீட்டருக்கு அருகாமையிலோ குடியமர்த்த வேண்டுமென தொடர்ந்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தி வருகிறது.

சத்தியவாணி முத்து நகர், காந்தி நகர், இந்திரா நகர் ஆகிய பகுதிகளில் குடியிருந்த மக்களை கடந்த ஆண்டு வலுக்கட்டாயமாக காவல்துறையின் உதவியோடு அரசு அப்புறப்படுத்தும் போது மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கடுமையாக எதிர்த்து போராட்டங்களை  நடத்திய போது 2019 டிசம்பர் 29 அன்று காவல்துறையினரால் கட்சியின் கிளை செயலாளர் ஆசைத்தம்பி கடுமையாக தாக்குதலுக்கு உள்ளாக்கப்பட்டார். மேலும் கட்சியின் மாநில செயலாளர் கே. பாலகிருஷ்ணன் நேரடியாக அப்பகுதி மக்களை சந்தித்து அவர்களின் கோரிக்கைகளை கேட்டறிந்து குடியிருப்புகளை அகற்றக் கூடாது என தமிழக அரசை வலியுறுத்தினார்.

இதைத் தொடர்ந்து 2020 நவம்பர் 4ஆம் தேதி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில்  மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் அப்பகுதி மக்களுடன் சென்னையில் கட்டப்பட்டுள்ள குடிசை மாற்று வாரிய குடியிருப்புகளில் வீடு ஒதுக்க கோரி மனு கொடுக்கும் இயக்கம் நடைபெற்றது. தொடர்ந்து குடிசை மாற்று வாரிய அதிகாரிகள், பொதுப்பணித்துறை அதிகாரிகள் ஆகியோரை நேரடியாக சந்தித்து கோரிக்கைகளை வலியுறுத்தி மனுக்கள் அளிக்கப்பட்டது.

இத்தகைய சூழலில் வலுக்கட்டாயமாக அப்பகுதி மக்களை சென்னைக்கு வெளியே குடியமர்த்தி அம்மக்களின் வாழ்வாதார உரிமைகளுக்கு பாதகம் விளைவிக்காமல், புளியந்தோப்பு கேபி பார்க் பகுதியில் கட்டப்பட்டுள்ள 1056 குடியிருப்புகளில் குடியமர்த்த கோரி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் ஜி. ராமகிருஷ்ணன், மத்திய சென்னை மாவட்டச் செயலாளர் ஜி. செல்வா ஆகியோர் மாநில துணை முதல்வர் ஓ பன்னீர்செல்வத்தை நேரடியாக சந்தித்து மனு அளித்தனர். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் விளக்கங்கள், உரிய ஆவணங்கள் ஆதாரங்களுடன் உள்ளடக்கிய கோரிக்கை மனுவை பரிசீலித்து உடன் நடவடிக்கை எடுப்பதாக  துணை முதல்வர் உறுதியளித்துள்ளார். இவ்வாறு அதில் குறிப்பிட்டுள்ளார். 
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.