இந்திய ரூபாயின் மதிப்பு மேலும் வீழ்ச்சி! ரூ. 92.37 ஆக சரிவு!போரை நிறுத்த 3 நிபந்தனைகள் விதித்த ஈரான் அதிபர்! ஹோர்முஸ் நீரிணையைக் கடந்த இந்திய கப்பல்கள்! ஈரான் அனுமதி! தமிழ்நாட்டில் பாதுகாப்பு இல்லை! நாள்தோறும் கொலை, பாலியல் வன்கொடுமை! விஜய் கண்டனம் பெட்ரோல், டீசல் தட்டுப்பாடு இல்லை! எண்ணெய் நிறுவனங்கள் விளக்கம் சென்னை மாநகராட்சி உணவகங்களுக்கு 2 வாரத்துக்கான சமையல் எரிவாயு இருப்புதென் கடலோர மாவட்டங்களில் மாா்ச் 16 வரை மழைக்கு வாய்ப்புதோ்தல் ஆணையரைப் பதவி நீக்க தீா்மானம்: நாடாளுமன்றத்தில் நோட்டீஸ் தாக்கல் செய்ய எதிா்க்கட்சிகள் திட்டம்சட்டப் பாடங்களை இறுதி செய்ய நிபுணா் குழு - மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவுபணப் புழக்கத்தை அதிகரிக்க ரூ.50,000 கோடிக்கு அரசுப் பத்திரங்களை வாங்கும் ரிசா்வ் வங்கி - நாளை ஏலம்பட்டுக்கோட்டையில் வெறிநாய் கடித்து எஸ்எஸ்எல்சி மாணவிகள் 6 போ் உள்பட 20 போ் காயம்: முதலுதவிக்குப் பின் பொதுத்தோ்வு எழுதினா்சுகாதார ஆய்வாளா்கள் நியமனம்: தமிழக அரசுக்கு அனுமதி வழங்கி உத்தரவு
/

இரண்டு மணி நேரத்தில் 25 பேருக்கு  கரோனா தடுப்பூசி: அமைச்சர் விஜயபாஸ்கர்

தமிழகத்தில் கரோனா தடுப்பூசி ஒத்திகை நாளை தொடங்கவுள்ள நிலையில்,  2 மணி நேரத்தில் 25 பேருக்கு தடுப்பூசி போடுவதற்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார். 

News image
கோப்புப்படம்
Updated On :1 ஜனவரி 2021, 8:18 am

DIN

தமிழகத்தில் கரோனா தடுப்பூசி ஒத்திகை நாளை தொடங்கவுள்ள நிலையில்,  2 மணி நேரத்தில் 25 பேருக்கு தடுப்பூசி போடுவதற்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார். 

சென்னையில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் கூறியதாவது:

தமிழகத்தில் கரோனா தொற்று பெருமளவு குறைந்துள்ளது. தமிழகத்தில் தொற்று குறைந்தாலும், பரிசோதனையை குறைக்கவில்லை. பரிசோதனையை குறைக்கக் கூடாது என்பதே நம் திட்டம். சுகாதாரத்துறையில் வலுவான கட்டமைப்பைக் கொண்டிருக்கிறோம். 

சென்னை, திருவள்ளூர், கோவை, நீலகிரி, நெல்லை ஆகிய மாவட்டங்களில் நாளை கரோனா தடுப்பூசி ஒத்திகை நடைபெறுகிறது. 5 மாவட்டங்களிலுள்ள மொத்தம் 17 இடங்களில் ஒத்திகை நடைபெறும். பாதுகாப்பாக கவனமாக துல்லியமாக செய்யவேண்டிய விஷயம். எனவே சரியான திட்டமிடலுக்காக ஒத்திகை அவசியமாகிறது. கரோனா தடுப்பூசி பணிக்காக சுகாதாரப் பணியாளர்கள் 21,170 பேருக்கு பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது. 2 மணி நேரத்தில் 25 பேருக்கு  கரோனா தடுப்பூசி போட வேண்டும் என நிர்ணயித்துள்ளோம். இதற்காக அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளது என்றார். 

முன்னதாக, பல்வேறு மாநிலங்களில் கரோனா தடுப்பூசி ஒத்திகை நடைபெற்று வரும் நிலையில் தமிழகத்தில் வருகின்ற ஜனவரி 2 ஆம் தேதி கரோனா தடுப்பூசி ஒத்திகை நடக்கவுள்ளதாக மத்திய அரசு தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.