லெபனான் மீதான இஸ்ரேலின் தாக்குதலில் 570 பேர் கொலை! எல்பிஜி தட்டுப்பாடு: ரயில்களில் உணவு வழங்குவதில் சிக்கல்?கேஸ் தட்டுப்பாடு, தமிழர்களுக்கு சிறப்பு விமானம்... பிரதமருக்கு முதல்வர் கடிதம்!கார்த்தி சிதம்பரம் எம்பி அலுவலகம் மீது பெட்ரோல் குண்டுவீச்சு! ஹோர்முஸ் நீரிணையில் கண்ணிவெடி பதிக்கும் 16 ஈரான் கப்பல்களை அழித்த அமெரிக்கா! தமிழ்நாட்டில் இருந்து புறப்பட்டார் ஆளுநர் ஆர்.என். ரவி! மேற்கு வங்க ஆளுநராக ஆர்.என்.ரவி நாளை பதவியேற்பு!நீட் தேர்வுக்கு விண்ணப்பிக்க இன்றே கடைசி நாள்!தமிழ்நாட்டில் மீண்டும் 'அம்மா' ஆட்சி: பியூஷ் கோயல்அரசுப் பள்ளி சத்துணவில் பல்லி: மாணவர்கள் மருத்துவமனையில் அனுமதி!நவாஸ்கனி எம்.பி.க்கு எதிரான வழக்கை திரும்பப் பெற ஓ.பன்னீர்செல்வம் முடிவுதென் தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புதமிழகத்தில் சமையல் எரிவாயு சிலிண்டர்களுக்கு தட்டுப்பாடுபிரதமர் மோடி இன்று திருச்சி வருகை! ரூ. 5,650 கோடி திட்டங்களை தொடங்கி வைக்கிறார்!மின்மாற்றிகள் கொள்முதலில் ரூ.397 கோடி ஊழல் இல்லை: டான்ஜெட்கோ நேரடி பணி நியமனங்களில் ஓபிசி பிரிவினருக்கு 27% இடஒதுக்கீடு அமல்: மத்திய அரசு!
/

குரூப் 1 தேர்வில் முறைகேடுகளை தவிர்க்க விடைத்தாளில் மாற்றங்கள்: டிஎன்பிஎஸ்சி தலைவர் பாலசந்திரன் பேட்டி

குரூப் 1 தேர்வில் முறைகேடுகளை தவிர்க்க ஓஎம்ஆர் விடைத்தாளில் பல்வேறு மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளதாக, தமிழ்நாடு பணியாளர் தேர்வாணையத்தின் தலைவர் பாலசந்திரன் தெரிவித்தார். 

News image
கோவை சித்தாபுதூர் மாநகராட்சி பள்ளியில் உள்ள குரூப்-1 தேர்வு மையத்தில் ஆய்வு மேற்கொண்ட தமிழ்நாடு தேர்வாளர் பணி ஆணையத்தின் தலைவர் பாலச்சந்திரன்.
Updated On :3 ஜனவரி 2021, 6:31 am

DIN


கோவை: குரூப் 1 தேர்வில் முறைகேடுகளை தவிர்க்க ஓஎம்ஆர் விடைத்தாளில் பல்வேறு மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளதாக, தமிழ்நாடு பணியாளர் தேர்வாணையத்தின் தலைவர் பாலசந்திரன் தெரிவித்தார். 

கோவை சித்தாபுதூர் மாநகராட்சி பள்ளியில் உள்ள குரூப்-1 தேர்வு மையத்தில் ஆய்வு மேற்கொண்ட தமிழ்நாடு தேர்வாளர் பணி ஆணையத்தின் தலைவர் பாலச்சந்திரன் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டி: 

கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் நடத்தப்பட வேண்டிய தமிழக அரசின் முதன்மையான தேர்வான குரூப் 1  தேர்வு கரோனா தொற்று பரவலால் தள்ளி வைக்கப்பட்டு ஞாயிற்றுக்கிழமை (ஜன.3) முதல்நிலைத் தேர்வு நடைபெற்று வருகிறது.

தமிழகம் முழுவதும் 856 மையங்களில் தேர்வு நடைபெற்று வருகிறது. இத்தேர்வுக்கு 2,56,000 பேர் பதிவு செய்துள்ளனர். நேற்று முன் தினம் வரை 1,61,000 பேர் தேர்வு நுழைவுச் சீட்டினை பதிவிறக்கம் செய்துள்ளனர்.

கரோனா அச்சம் காரணமாக 856 மையங்களில் சானிடைசர், உடல் வெப்பம் பரிசோதனை செய்யப்படுகிறது. 

Story image


கோவையில் உள்ள குரூப்-1 தேர்வு மையத்தில் ஆய்வு மேற்கொண்ட தமிழ்நாடு தேர்வாளர் பணி ஆணையத்தின் தலைவர் பாலச்சந்திரன். 

தேர்வர்கள் யாருக்காவது உடல் வெப்பநிலையில் மாற்றம் இருந்தால், அவர்கள் தனியாக தேர்வு எழுத ஒவ்வொரு தேர்வு மையங்களிலும் 2 ஹால்கள் தனியாக ஒதுக்கப்பட்டு அங்கு தேர்வு எழுத நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

856 மையங்களிலும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மாவட்ட ஆட்சியர் மூலம் உள்ளாட்சி துறை மூலம் கரோனா தடுப்பு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளது.

இதற்கு முன்னர் தேர்வுகளில் நடைபெற்ற முறைகேடுகளை முழுமையாக அறிந்து அதன் அடிப்படையில் ஓ.எம்.ஆர். ஷீட்டுகளில் பல்வேறு புதிய முறைகள் புகுத்தப்பட்டுள்ளது.

இத்தேர்வு எழுதப்படும் போது தேர்வர்களின் விவரங்கள் அடங்கிய தொகுப்பானது தேர்வு மையங்களிலேயே தனியாக பிரிக்கப்பட்டு, தேர்வு விடைத்தாள் மட்டுமே தனியாக வேறொரு கவர்களில் வைக்கப்படும். யாராவது வழியிலேயே ஓ.எம்.ஆர்., ஷீட்டுகளை மாற்ற முடியாதபடி, ஓ.எம்.ஆர்., ஷீட் மாற்றியமைக்கப்படும். இதற்கு முன்னர் ஓ.எம்.ஆர்., ஷீட்களின் பட்டியலின் மேற்பகுதியில் உள்ள விவரங்கள் ஷீட்களின் ஓரப்பகுதியில் கொண்டு வரப்பட்டு, அதை கிழித்து வைக்கும்படி செய்யப்பட்டுள்ளது.

தேர்வர்கள் தேர்வு எழுதி முடிக்கப்பட்ட பிறகு, எத்தனை ஏ, பி, சி, டி என்ற விவரத்தை அந்த தேர்வர்கள் முன்னியிலேயே சரிபார்த்து கண்காணிப்பு அலுவலர்கள் கையெழுத்திடும் புதிய நடைமுறையை கொண்டு வந்துள்ளோம். இதன் மூலம், அழிகின்ற மையினால் தேர்வை எழுதிவிட்டு, வழியிலேயே அந்த மையை புதிதாக மாற்ற முடியாது. கருப்பு பேனாவால் மட்டுமே எழுத வேண்டும் என்ற நடைமுறையையும் கொண்டு வந்துள்ளோம்.

கூடுதலாக 1.15 வரை கால அவகாசம் வழங்கி, தேர்வர்களும், கண்காணிப்பு அலுவலர்களும் சரிபார்த்து சில விவரங்களை கொடுக்க வழங்கி உள்ளோம்.

தவிர, கேள்விகள் தவறு என்கிற பட்சத்தில் புதிதாக E என்ற குறிப்பை கருமையாக்கினால் முழு மதிப்பெண் வழங்கும் வகையிலும், 200 கேள்விகளுக்கும் பதில் அளிக்க வேண்டும் போன்ற புதிய நடைமுறையை கொண்டு வந்துள்ளோம்.

ஓ.எம்.ஆர்., தான் பல்வேறு முறைகேடுகளுக்கு காரணமாக இருப்பதால், தேர்வர்களின் கட்ட விரல் ரேகை பெறப்பட வேண்டும் என்றும், ஒவ்வொரு தேர்வர்களுக்கும் வெவ்வேறு விதமான சீரியல் எண் கொண்ட கேள்வி தாள்கள் வழங்கப்பட்டுள்ளது என்று பாலச்சந்திரன் தெரிவித்தார். பேட்டியின் போது மாவட்ட ஆட்சியர் ராஜாமணி உடனிருந்தார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.