'நர்மதா' ராமலிங்கம் காலமானார்

'நர்மதா' ராமலிங்கம் காலமானார்

​நர்மதா பதிப்பகம், நியூ புக்லேண்ட்ஸ் நிறுவனரான 'நர்மதா'  டி.எஸ். ராமலிங்கம் (70) திங்கள்கிழமை அதிகாலை மாரடைப்பால் காலமானார்.
Published on


நர்மதா பதிப்பகம், நியூ புக்லேண்ட்ஸ் நிறுவனரான 'நர்மதா'  டி.எஸ். ராமலிங்கம் (70) திங்கள்கிழமை அதிகாலை மாரடைப்பால் காலமானார்.

மறைந்த ராமலிங்கத்தின் விருப்பப்படியே அவருடைய உடல் ஸ்ரீ ராமச்சந்திரா மருத்துவக் கல்லூரி - மருத்துவமனையிடம் கொடையாக ஒப்படைக்கப்பட்டது.

தமிழில் 4 ஆயிரத்துக்கும் மேற்பட்ட நூல்களைப் பதிப்பித்தவர் ராமலிங்கம்; புதுமையான வடிவமைப்புகளில் புத்தகங்களை வெளியிட்டவர்.

எழுத்தாளர்கள் வண்ணநிலவன், பாலகுமாரன், பிரபஞ்சன் போன்றோரின் முதல் நூல்கள் இவரால்தான் வெளியிடப்பட்டன.

மறைந்த ராமலிங்கத்துக்கு மனைவி மணிமேகலை, மகன் ஜனார்த்தனன், மகள் ரேணுகா ஆகியோர் உள்ளனர். தொடர்புக்கு: +91 98406 68756

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

X
Dinamani
www.dinamani.com