டி20 உலகக் கோப்பை : தென்னாப்பிரிக்காவை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது நியூசிலாந்து!மாநிலங்களவை அதிமுக வேட்பாளராக தம்பிதுரை அறிவிப்பு - பாமகவுக்கு ஒரு இடம்!முஸ்லிம்கள் கொல்லப்படுவதில் மேற்கு வங்கம் முதலிடம் - பாஜக குற்றச்சாட்டு! திருச்சி சிவா, பேராசிரியர் கான்ஸ்டன்டைன் ரவீந்திரன் - மாநிலங்களவை திமுக வேட்பாளர்களாக போட்டியிடுகின்றனர்மாநிலங்களவை உறுப்பினர் ஆகிறார் பிகார் முதல்வர் நிதீஷ் குமார்?28 பேரவை, 1 மாநிலங்களவை : கூட்டணி பங்கீட்டில் மனநிறைவு - செல்வப்பெருந்தகை
/

நியாயவிலைக் கடைகளில் பொங்கல் பரிசு விநியோகம் தொடக்கம்

தமிழகத்தில் உள்ள நியாயவிலைக் கடைகளில் 2,500 ரூபாயுடன் பொங்கல் பரிசுத்தொகுப்பு விநியோகம் இன்று தொடங்கியது.

News image
கோப்புப்படம்.
Updated On :4 ஜனவரி 2021, 3:16 am

DIN

தமிழகத்தில் உள்ள நியாயவிலைக் கடைகளில் 2,500 ரூபாயுடன் பொங்கல் பரிசுத்தொகுப்பு விநியோகம் இன்று தொடங்கியது. மாநிலம் முழுவதும் உள்ள அனைத்து நியாய விலைக் கடைகளிலும் காலை மற்றும் மாலையில் தலா 100 குடும்ப அட்டைதாரா்களுக்கு பொங்கல் பரிசுத் தொகுப்பு அளிக்கப்பட உள்ளது.

பொங்கல் பரிசுத் தொகுப்பில் ஒரு கிலோ அரிசி, ஒரு கிலோ சா்க்கரை, முழு நீள கரும்பு, 5 கிராம் ஏலக்காய், முந்திரி, திராட்சை தலா 20 கிராம் ஆகியன துணிப்பையில் வைத்து வழங்கப்பட உள்ளன. இத்துடன் ரூ.2,500 ரொக்கத் தொகை அளிக்கப்படுகிறது.

பொங்கல் பரிசுத் தொகுப்பினை வழங்க வீடு வீடாக ஏற்கெனவே டோக்கன்கள் விநியோகம் செய்யப்பட்டுள்ளன. நாளொன்றுக்கு 200 குடும்ப அட்டைகள் வீதம் அனைத்து குடும்ப அட்டைதாரா்களுக்கும் பொங்கல் பரிசுத் தொகுப்பு அளிக்கப்பட உள்ளது.வரும் 12-ஆம் தேதி வரை பொங்கல் பரிசுத் தொகுப்பு அளிக்கப்பட உள்ளது.

விடுபட்டவா்களுக்கு வரும் 13-ஆம் தேதியன்று அளிக்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.