டி20 உலகக் கோப்பை : தென்னாப்பிரிக்காவை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது நியூசிலாந்து!மாநிலங்களவை அதிமுக வேட்பாளராக தம்பிதுரை அறிவிப்பு - பாமகவுக்கு ஒரு இடம்!முஸ்லிம்கள் கொல்லப்படுவதில் மேற்கு வங்கம் முதலிடம் - பாஜக குற்றச்சாட்டு! திருச்சி சிவா, பேராசிரியர் கான்ஸ்டன்டைன் ரவீந்திரன் - மாநிலங்களவை திமுக வேட்பாளர்களாக போட்டியிடுகின்றனர்மாநிலங்களவை உறுப்பினர் ஆகிறார் பிகார் முதல்வர் நிதீஷ் குமார்?28 பேரவை, 1 மாநிலங்களவை : கூட்டணி பங்கீட்டில் மனநிறைவு - செல்வப்பெருந்தகை
/

மேட்டூர் அணையிலிருந்து தண்ணீர் திறப்பு குறைப்பு

மேட்டூர் அணையிலிருந்து காவிரி டெல்டா பாசனத்திற்கு திறக்கப்படும் நீரின் அளவு வினாடிக்கு 500 கன அடியாக குறைக்கப்பட்டுள்ளது.

News image
மேட்டூர் அணையிலிருந்து தண்ணீர் திறப்பு குறைப்பு
Updated On :5 ஜனவரி 2021, 4:23 am

DIN

மேட்டூர் அணையிலிருந்து காவிரி டெல்டா பாசனத்திற்கு திறக்கப்படும் நீரின் அளவு வினாடிக்கு 500 கன அடியாக குறைக்கப்பட்டுள்ளது.

காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில்  மழை இல்லாத காரணத்தால் மேட்டூர் அணைக்கு  நீர்வரத்து வினாடிக்கு 1500 கன அடிக்கு குறைவாகவே நீர்வரத்து உள்ளது.

இந்த நிலையில் காவிரி டெல்டா பாசனப் பகுதிகளில் பாசனத் தேவை காரணமாக வினாடிக்கு 2 ஆயிரம் கன அடி தண்ணீர் திறக்கப்பட்டது. இதுபோல கிழக்கு மேற்கு கால்வாய் பாசனத்திற்காக 600 கன அடி தண்ணீர் திறக்கப்பட்டு வந்தது.

இந்த நிலையில் தற்போது காவிரி டெல்டா பாசனப் பகுதியில் லேசான மழை பெய்து வருவதால் மேட்டூர் அணையிலிருந்து திறக்கப்படும் நீரின் அளவு வினாடிக்கு 500 கன அடியாக குறைக்கப்பட்டு உள்ளது.

இன்று காலை 8 மணி நிலவரப்படி மேட்டூர் அணையின் நீர்மட்டம் 104.94 அடியாக உள்ளது.

நீர்இருப்பு :  71.391 டி.எம்.சி. 
நீர் வரத்து : வினாடிக்கு 1,269 கன அடி.
வெளியேற்றம் : டெல்டா பாசனத் தேவைக்காக வினாடிக்கு 500 கன அடி  தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.
கிழக்கு மேற்கு கால்வாய் பாசனத்திற்கு வினாடிக்கு 600 கன அடி தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.