டி20 உலகக் கோப்பை : தென்னாப்பிரிக்காவை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது நியூசிலாந்து!மாநிலங்களவை அதிமுக வேட்பாளராக தம்பிதுரை அறிவிப்பு - பாமகவுக்கு ஒரு இடம்!முஸ்லிம்கள் கொல்லப்படுவதில் மேற்கு வங்கம் முதலிடம் - பாஜக குற்றச்சாட்டு! திருச்சி சிவா, பேராசிரியர் கான்ஸ்டன்டைன் ரவீந்திரன் - மாநிலங்களவை திமுக வேட்பாளர்களாக போட்டியிடுகின்றனர்மாநிலங்களவை உறுப்பினர் ஆகிறார் பிகார் முதல்வர் நிதீஷ் குமார்?28 பேரவை, 1 மாநிலங்களவை : கூட்டணி பங்கீட்டில் மனநிறைவு - செல்வப்பெருந்தகை
/

கதம்ப காய்கறி கூட்டு

காய்கறிகளை சேர்த்து கதம்ப காய்கறி கூட்டு செய்து அசத்தலாம்.

News image
கதம்ப காய்கறி கூட்டு
Updated On :7 ஜனவரி 2021, 6:05 am

DIN

காய்கறிகளை சேர்த்து கதம்ப காய்கறி கூட்டு செய்து அசத்தலாம்.

தேவையானவை:

கேரட், பீன்ஸ், அவரைக்காய், சேப்பக்கிழங்கு, பூசணிக்காய், பரங்கிக்காய் - சிறிதளவு
தேங்காய்த் துருவல் - 1/2 கிண்ணம்
சாம்பார் பொடி - 2 தேக்கரண்டி
துவரம் பருப்பு - 100 கிராம்
புளி - எலுமிச்சம்பழம் அளவு
கடுகு, உளுந்தம் பருப்பு - தலா 2 தேக்கரண்டி
மஞ்சள் தூள் - சிறிதளவு
பெருங்காயத் தூள் - 1 தேக்கரண்டி
நல்லெண்ணெய் - 3 தேக்கரண்டி
கறிவேப்பிலை, கொத்தமல்லித் தழை - சிறிதளவு
உப்பு - தேவையான அளவு

செய்முறை:

அனைத்து காய்கறிகளையும் சற்று நீள நீளமாக நறுக்கி பருப்புடன் மஞ்சள் தூள், உப்பு சேர்த்து குழையாமல் வேக வைக்கவும்.

பின் புளியைக் கரைத்துவிட்டு, சாம்பார் பொடியைச் சேர்க்கவும். தேங்காய்த் துருவலை வெறும் கடாயில் வறுத்து, மிக்ஸியில் பொடித்து காய்கறி கலவையுடன் சேர்க்கவும்.

நல்லெண்ணெயைக் காயவிட்டு கடுகு, உளுத்தம் பருப்பு, பெருங்காயத் தூள் சேர்த்து தாளித்து கூட்டுடன் கலந்து, ஒரு கொதிவிட்டு கறிவேப்பிலை, கொத்தமல்லித் தழை சேர்த்து இறக்கவும்.

- ராஜேஸ்வரி ரவிக்குமார்

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.