கேஸ் தட்டுப்பாடு, தமிழர்களுக்கு சிறப்பு விமானம்... பிரதமருக்கு முதல்வர் கடிதம்!கார்த்தி சிதம்பரம் எம்பி அலுவலகம் மீது பெட்ரோல் குண்டுவீச்சு! ஹோர்முஸ் நீரிணையில் கண்ணிவெடி பதிக்கும் 16 ஈரான் கப்பல்களை அழித்த அமெரிக்கா! தமிழ்நாட்டில் இருந்து புறப்பட்டார் ஆளுநர் ஆர்.என். ரவி! மேற்கு வங்க ஆளுநராக ஆர்.என்.ரவி நாளை பதவியேற்பு!நீட் தேர்வுக்கு விண்ணப்பிக்க இன்றே கடைசி நாள்!தமிழ்நாட்டில் மீண்டும் 'அம்மா' ஆட்சி: பியூஷ் கோயல்அரசுப் பள்ளி சத்துணவில் பல்லி: மாணவர்கள் மருத்துவமனையில் அனுமதி!நவாஸ்கனி எம்.பி.க்கு எதிரான வழக்கை திரும்பப் பெற ஓ.பன்னீர்செல்வம் முடிவுதென் தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புதமிழகத்தில் சமையல் எரிவாயு சிலிண்டர்களுக்கு தட்டுப்பாடுபிரதமர் மோடி இன்று திருச்சி வருகை! ரூ. 5,650 கோடி திட்டங்களை தொடங்கி வைக்கிறார்!மின்மாற்றிகள் கொள்முதலில் ரூ.397 கோடி ஊழல் இல்லை: டான்ஜெட்கோ நேரடி பணி நியமனங்களில் ஓபிசி பிரிவினருக்கு 27% இடஒதுக்கீடு அமல்: மத்திய அரசு!
/

சாம்ராஜ்நகர் மருத்துவக் கல்லூரியில் சிறுத்தை நடமாட்டம்

சாம்ராஜ்நகர் மருத்துவக் கல்லூரியில் சிறுத்தை நடமாட்டம் இருப்பது சிசிடிவி காட்சியில் பதிவாகியுள்ளது.

News image
மருத்துவக் கல்லூரியில் சிறுத்தை நடமாட்டம்
Updated On :7 ஜனவரி 2021, 11:05 am

DIN

சாம்ராஜ்நகர் மருத்துவக் கல்லூரியில் சிறுத்தை நடமாட்டம் இருப்பது சிசிடிவி காட்சியில் பதிவாகியுள்ளது.

தமிழகம் கர்நாடக எல்லையில் கர்நாடக பந்திப்பூர் புலிகள் காப்பகம் அமைந்துள்ளது. இங்கு சிறுத்தைகள் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக வனவிலங்குகள் கணக்கெடுப்பில் தெரியவந்தது. 

பந்திப்பூர் வனத்தையொட்டியுள்ள எடபெட்டா மலைப்பகுதியில் சாம்ராஜ்நகர் மருத்துவக் கல்லூரி அமைந்துள்ளது. புதன்கிழமை நள்ளிரவில் மருத்துவக்கல்லூரியில் உறுமல் சப்தம் கேட்டு கல்லூரி ஆசிரியர்கள் சிசிடிவி காட்சி பதிவை ஆய்வு செய்தபோது சிறுத்தை ஒன்று கல்லூரியில் புகுந்தது தெரியவந்தது. 

Story image

சிறுத்தை வழி தெரியாமல் அறைக்குள் புகுவதும் படிக்கட்டியில் செல்வது பதிவாகியிருந்தது. இதையடுத்து மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் எச்சரிக்கப்பட்டுத் தங்கும் அறையிலிருந்து வெளியே வரவேண்டாம் என அறிவுறுத்தப்பட்டது. அங்கு வந்த வனத்துறையினர் சிறுத்தை தேடிப் பார்த்தபோது அது மற்றொரு வழியாக வெளியேறியது தெரியவந்தது. 

இருப்பினும் வனத்துறையினர் சிறுத்தை சென்ற இடத்தை ஆய்வு செய்து வருகின்றனர். சாம்ராஜ்நகரில் இருந்து 4 கிமீ தூரத்தில் உள்ள மருத்துவக் கல்லூரியில் சிறுத்தை புகுந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.