டி20 உலகக் கோப்பை : தென்னாப்பிரிக்காவை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது நியூசிலாந்து!மாநிலங்களவை அதிமுக வேட்பாளராக தம்பிதுரை அறிவிப்பு - பாமகவுக்கு ஒரு இடம்!முஸ்லிம்கள் கொல்லப்படுவதில் மேற்கு வங்கம் முதலிடம் - பாஜக குற்றச்சாட்டு! திருச்சி சிவா, பேராசிரியர் கான்ஸ்டன்டைன் ரவீந்திரன் - மாநிலங்களவை திமுக வேட்பாளர்களாக போட்டியிடுகின்றனர்மாநிலங்களவை உறுப்பினர் ஆகிறார் பிகார் முதல்வர் நிதீஷ் குமார்?28 பேரவை, 1 மாநிலங்களவை : கூட்டணி பங்கீட்டில் மனநிறைவு - செல்வப்பெருந்தகை
/

பாலங்கள், ரயில்வே கீழ்பாலத்தை திறந்து வைத்தார் முதல்வர் பழனிசாமி

சேலம் உள்ளிட்ட மாவட்டங்களில் கட்டி முடிக்கப்பட்ட பாலங்கள் மற்றும் ரயில்வே கீழ்பாலத்தை தமிழக முதல்வர் எடப்பாடி கே. பழனிசாமி இன்று திறந்து வைத்தார்.

News image
பாலங்கள், ரயில்வே கீழ்பாலத்தை திறந்து வைத்தார் முதல்வர் பழனிசாமி
Updated On :8 ஜனவரி 2021, 11:10 am

DIN


சென்னை: சேலம் உள்ளிட்ட மாவட்டங்களில் கட்டி முடிக்கப்பட்ட பாலங்கள் மற்றும் ரயில்வே கீழ்பாலத்தை தமிழக முதல்வர் எடப்பாடி கே. பழனிசாமி இன்று திறந்து வைத்தார்.

இது குறித்து தமிழக அரசு வெளியிட்டிருக்கும் செய்திக் குறிப்பில், தமிழக முதல்வர் எடப்பாடி கே. பழனிசாமி இன்று (8.1.2021) தலைமைச் செயலகத்தில், நெடுஞ்சாலைகள் மற்றும் சிறு துறைமுகங்கள் துறை சார்பில் சேலம் மாவட்டம், சேலம் தெற்கு வட்டம், திருச்செங்கோடு - அரியானூர் சாலையில் 45 கோடி ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள பாலத்தினை காணொலிக் காட்சி மூலமாக திறந்து வைத்தார். 

மேலும் விருதுநகர், தூத்துக்குடி புதுக்கோட்டை, தேனி, கோயம்புத்தூர் மற்றும் சேலம் ஆகிய மாவட்டங்களில் 40 கோடியே 73 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள 6 பாலங்கள் மற்றும் ஒரு இரயில்வே கீழ்பாலத்தை பொது மக்கள் பயன்பாட்டிற்காக திறந்து வைத்தார்.

மாநிலத்தின் சமூக மற்றும் பொருளாதார வளர்ச்சியில் சாலை உட்கட்டமைப்பு வசதிகளின் முக்கியத்துவத்தினை உணர்ந்தும், பெருகிவரும் போக்குவரத்து தேவைக்கேற்ப சாலைகளின் கொள்ளளவை அதிகரிக்கவும், பாதுகாப்பான பயணத்தினை உறுதிசெய்யவும், மாநிலம் முழுவதும் புதிய பாலங்களை கட்டுதல், தேவையான பகுதிகளில் தரமான சாலைகளை அமைத்தல், சாலைகள் மற்றும் பாலங்களை பராமரித்தல் போன்ற பணிகளை தமிழ்நாடு அரசு முனைப்புடன் செயல்படுத்தி வருகிறது.

அந்த வகையில், சேலம் மாவட்டம், சேலம் தெற்கு வட்டம், திருச்செங்கோடு - அரியானூர் சாலை கி.மீ.32/4 (தேசிய நெடுஞ்சாலை 544) அரியானூரில் 45 கோடி ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள பாலத்தினை தமிழக முதல்வர் பழனிசாமி இன்று காணொலி காட்சி மூலமாக திறந்து வைத்தார்.

மேலும், விருதுநகர் மாவட்டம் - ராஜபாளையம் வட்டம், ராஜபாளையம் - அய்யனார்கோவில் வழி செண்பகத்தோப்பு சாலை, தென்றல் நகரில் 2 கோடி ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள பாலம்; தூத்துக்குடி மாவட்டம் - சாத்தான்குளம் வட்டம், திசையன்விளை – உடன்குடி சாலை, மணிநகரில் 6 கோடி ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள பாலம்; புதுக்கோட்டை மாவட்டம் - கறம்பக்குடி வட்டம், செங்கமேடு - மணமடை - வெட்டிக்காடு சாலை, செங்கமேட்டில் 3 கோடியே 90 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள பாலம்; தேனி மாவட்டம், உத்தமபாளையம் வட்டம், பூலாநந்தபுரம் - குச்சனூர் சாலை, பூலாநந்தபுரத்தில் 6 கோடியே 33 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள பாலம்; கோயம்புத்தூர் மாவட்டம், கோயம்புத்தூர் வடக்கு வட்டம், காந்திஜி சாலை, கண்ணப்பன் நகரில், பீளமேடு மற்றும் கோயம்புத்துhர் வடக்கு இரயில் நிலையங்களுக்கிடையில் உள்ள கடவு எண். 13-க்கு மாற்றாக 14 கோடி ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள இரயில்வே கீழ்பாலம்; சேலம் மாவட்டம் - வாழப்பாடி வட்டம், புழுதிக்குட்டை - சந்துமலை சாலை, புங்கமடுவில் 3 கோடியே 50 லட்சம் ரூபாய் மதிப்பீட்டிலும்; ஆத்தூர் வட்டம், சேலம் - உளுந்தூர்பேட்டை -அம்மம்பாளையம் நரிக்குறவர் காலனி சாலையில் வசிஷ்ட நதியின் குறுக்கே 5 கோடி ரூபாய் மதிப்பீட்டிலும் கட்டப்பட்டுள்ள 2 பாலங்கள்; என மொத்தம் 85 கோடியே 73 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள பாலங்களை தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் இன்று திறந்து வைத்தார். 

மேலும், நெடுஞ்சாலைத்துறையில் பணிபுரியும் அனைத்து பொறியாளர்களின் பயன்பாட்டிற்காக நெடுஞ்சாலைத்துறையின் தொழில்நுட்பங்கள் மற்றும் துறையின் அனைத்து விவரங்களையும் உள்ளடக்கிய “ரெடி ரெக்கோநெர் ஃபார் ஹைவே என்ஜினீயர்ஸ்” எனும் தொழில்நுட்பக் கையேட்டினை முதல்வர் பழனிசாமி இன்று வெளியிட்டார்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.