தைப்பூசத்திற்கு பொது விடுமுறை: பாலதண்டாயுதபாணி கோவிலில் சிறப்பு அபிஷேகம்  

திருப்பூர் மாவட்டம், பல்லடம் பாலதண்டாயுதபாணி கோவிலில் தைப்பூசத்திற்கு அரசு பொது விடுமுறை அறிவித்த தமிழக முதல்வர் எடப்பாடி கே.பழனிச்சாமிக்கு நன்றி தெரிவித்து
முதல்வர் மற்றும் அவரது குடும்பத்தினர் பல்லாண்டு காலம் வாழ வேண்டி பாலதண்டாயுதபாணி கோவிலில் சிறப்பு அபிஷேகம்.
முதல்வர் மற்றும் அவரது குடும்பத்தினர் பல்லாண்டு காலம் வாழ வேண்டி பாலதண்டாயுதபாணி கோவிலில் சிறப்பு அபிஷேகம்.
Updated on
1 min read

  
பல்லடம்: திருப்பூர் மாவட்டம், பல்லடம் பாலதண்டாயுதபாணி கோவிலில் தைப்பூசத்திற்கு அரசு பொது விடுமுறை அறிவித்த தமிழக முதல்வர் எடப்பாடி கே.பழனிச்சாமிக்கு நன்றி தெரிவித்து அவர் மற்றும் அவரது குடும்பத்தினர் பல்லாண்டு காலம் வாழ வேண்டி சிறப்பு அபிஷேகம் ஆராதனை வெள்ளிக்கிழமை நடைபெற்றது.  பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.

இந்த நிகழ்ச்சிக்கு தமிழ்நாடு முருக பக்தர்கள் பேரவை தலைவர் அண்ணாதுரை தலைமை வகித்தார். பல்லடம் தாலுக்கா வியாபாரிகள் சங்க தலைவர் ஆனந்தா செல்வராஜ் முன்னிலை வைத்தார்.

இந்த நிகழ்ச்சியில் பல்லடம் நகராட்சி முன்னாள் துணைத் தலைவர் தர்மராஜ்,மேஜிக் பிரபல நிபுணர் யோநா, காவடி பாதயாத்திரை குழுவினர் குழு தலைவர் வெள்ளிங்கிரி, தமிழ்நாடு பழனிசாமி, ரங்கசாமி, பல்லடம் ஐயப்ப பக்தர்கள் பேரவை குருசாமி ரவிச்சந்திரன் உள்பட பலர் பங்கேற்றனர்.

சாமி பிரசாதம் தபால் மூலமாக தமிழக முதல்வருக்கு முருக பக்தர்கள் பேரவை சார்பில் அனுப்பி வைக்கப்பட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com