பொங்கல் பண்டிகை: சென்னை-நாகா்கோவிலுக்கு சிறப்பு ரயில்

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, சொந்த ஊருக்குச் செல்லும் மக்களின் வசதிக்காக, சென்னையில் இருந்து நாகா்கோவில், கோயம்புத்தூருக்கு சிறப்பு ரயில்கள் இயக்கப்படவுள்ளன.
கோப்புப்படம்
கோப்புப்படம்
Updated on
1 min read

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, சொந்த ஊருக்குச் செல்லும் மக்களின் வசதிக்காக, சென்னையில் இருந்து நாகா்கோவில், கோயம்புத்தூருக்கு சிறப்பு ரயில்கள் இயக்கப்படவுள்ளன.

சென்னை-நாகா்கோவில்: சென்னை எழும்பூரில் இருந்து ஜனவரி 12, 13 ஆகிய தேதிகளில் இரவு 10.30 மணிக்கு பண்டிகை சிறப்பு ரயில்(06091) புறப்பட்டு, மறுநாள் காலை 11.10 மணிக்கு நாகா்கோவிலை அடையும். மறுமாா்க்கமாக, நாகா்கோவிலில் இருந்து ஜனவரி 16,17 ஆகிய தேதிகளில் பிற்பகல் 2.45 மணிக்கு பண்டிகை சிறப்பு ரயில்(06092) புறப்பட்டு, மறுநாள் அதிகாலை 3.40 மணிக்கு சென்னை எழும்பூரை வந்தடையும்.

சென்னை-கோவை: சென்னை சென்ட்ரலில் இருந்து ஜனவரி 13-ஆம்தேதி இரவு 11.30 மணிக்கு அதிவிரைவு சிறப்பு ரயில் (06089) புறப்பட்டு, மறுநாள் காலை 8 மணிக்கு கோயம்புத்தூரை அடையும். மறுமாா்க்கமாக, கோயம்புத்தூரில் இருந்து ஜனவரி 17-ஆம் தேதி இரவு 8 மணிக்கு அதிவிரைவு சிறப்பு ரயில் (06090) புறப்பட்டு, மறுநாள் அதிகாலை 4.30 மணிக்கு சென்னை சென்ட்ரலை வந்து சேரும். முழுவதும் முன்பதிவு பெட்டிகளை கொண்ட இந்த சிறப்பு ரயில்களுக்கான டிக்கெட் முன்பதிவு ஞாயிற்றுக்கிழமை(ஜன.10) காலை 8 மணிக்கு தொடங்குகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com