கோவை கரும்புக்கடை பகுதியில் 85 சிசிடிவி கேமராக்கள்: காவல் ஆணையர் சுமித் சரண் துவக்கி வைப்பு

பெண்கள் மற்றும் குழந்தைகளை பாதுகாக்கும் விதமாக இந்த சிசிடிவி கண்காணிப்பு கேமராக்கள் உள்ளது என கோவை மாநகர காவல் ஆணையர் சுமித்சரண் தெரிவித்துள்ளார்.
கோவை கரும்புக்கடை பகுதியில் 85 சிசிடிவி கேமராக்களை துவக்கி வைத்த கோவை காவல் ஆணையர் சுமித் சரண்.
கோவை கரும்புக்கடை பகுதியில் 85 சிசிடிவி கேமராக்களை துவக்கி வைத்த கோவை காவல் ஆணையர் சுமித் சரண்.

பெண்கள் மற்றும் குழந்தைகளை பாதுகாக்கும் விதமாக இந்த சிசிடிவி கண்காணிப்பு கேமராக்கள் உள்ளது என கோவை மாநகர காவல் ஆணையர் சுமித்சரண் தெரிவித்துள்ளார்.

கோவையில் மூன்றாவது கண் என்று மாநகர் முழுவதும் நடைபெறும் குற்றங்கள், விபத்துக்களை கண்காணிக்க மாநகர் காவல்துறை மற்றும் தன்னார்வலர்கள் இணைந்து மாநகர் முழுவதிலும் சிசிடிவி கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தும் பணி நடைபெற்று வருகிறது.  

இதன் ஒரு பகுதியாக கோவை டி4 குனியமுத்தூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதிகளில் அமைக்கபட்டுள்ள 85 சிசிடிவி கண்காணிப்பு கேமராக்கள் மற்றும் அதன் செயல்பாடுகளை துவக்கும் நிகழ்ச்சி ஆத்துப்பாலம் பகுதியில் நடைபெற்றது இதில் கலந்துகொண்ட கோவை மாநகர் காவல் ஆனையர் சுமித்சரண் சிசிடிவி கேமராக்களின் செயல்பாடுகளை துவக்கி வைத்தார்.

இதனை தொடர்ந்து உரையாற்றிய காவல்ஆனையர், இதுவரை கோவை மாநகரில் 10000 சிசிடிவி கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தபட்டு செயல்பாட்டுவருவதாக தெரிவித்தார். எந்த விதமான விபத்துக்கள், குற்றங்களையும் கண்டுபிடிக்க இந்த சிசிடிவி கேமராக்கள் உதவியாக உள்ளதாகவும், பெண்களை குழந்தைகளை பாதுகாக்கும் விதமாகவும் இந்த சிசிடிவி கேமராக்கள் பயன்படுகிறது எனவும் தெரிவித்தார்.

இந்நிகழ்வில் கோவை மாநகர் சட்டம் ஒழுங்கு துணை ஆனையர் ஸ்டாலின், குற்றப்பிரிவு துணை ஆனையர் உமா, போக்குவரத்து துணை ஆனையர் முத்தரசன் மற்றும் உதவி ஆனையர்கள், காவல் ஆய்வாளர்கள் மற்றும் தன்னார்வலர்கள் பலர் கலந்துகொண்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com