ராமேசுவரம் மீனவர்கள் மீது இலங்கை கடற்படை கல்வீசி தாக்குதல்

கச்சத்தீவு அருகே மீன்பிடித்துக்கொண்டிருந்த ராமேசுவரம் மீனவர்கள் மீது இலங்கை கடற்படையினர் கல்வீசி தாக்குதல் நடத்தியுள்ளனர்.  
Fishermen
Fishermen


கச்சத்தீவு அருகே மீன்பிடித்துக்கொண்டிருந்த ராமேசுவரம் மீனவர்கள் மீது இலங்கை கடற்படையினர் கல்வீசி தாக்குதல் நடத்தியுள்ளனர்.  

கச்சத்தீவு பகுதியில் மீன்பிடிப்பதற்காக சனிக்கிழமை காலை ராமேசுவரம் துறைமுகத்தில் இருந்து 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மீனவா்கள் மீன்பிடி அனுமதி சீட்டு பெற்று கடலுக்கு மீன்பிடிக்கச் சென்றனா்.

கச்சத்தீவு அருகே சனிக்கிழமை மாலை 5 மணியளவில் மீன்பிடித்துக்கொண்டிருந்தபோது, அங்கு இலங்கை கடற்படைக்கு சொந்தமான 3 அதிவேக கப்பலில் வந்த இலங்கை கடற்படையினர், மீனவர்கள் மீதும், படகுகள் மீதும் சரமாரியாக கற்களையும், கண்ணாடி பாட்டில்களையும் வீசி விரட்டியடித்தனர். இதனால் உயிருக்கு பயந்த மீனவர்கள் நாலாபுறமும் சிதறி ஓடினார்கள். மேலும் இரண்டு படகுகளையும், அதில் இருந்த 15க்கும் மேற்பட்ட மீனவர்களை கைது செய்தனர். 

இந்நிலையில், ஞாயிற்றுக்கிழமை அதிகாலை கரைதிரும்பிய மீனவர்கள் மீது மீண்டும் இலங்கை கடற்படையினர் மீன்பிடி உபகரணங்கள் மற்றும் படகுகளையும் சேதப்படுத்தி விரட்டியடித்தனர். இந்த சம்பவம் தமிழக மீனவர்களிடையே பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. 

இலங்கைக்கு அரசுமுறை பயணமாக சென்ற இந்திய வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர், இலங்கையில் உயர்மட்ட பேச்சுவார்த்தை நடத்தி சமூக உறவு ஏற்பட்டுள்ளதாக கூறிய 12 மணி நேரத்திற்குள் இரண்டு முறை தமிழக மீனவர்கள் மீது தாக்குதல் மற்றும் கைது நடவடிக்கை நடந்துள்ளது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com