பங்குச்சந்தை: சென்செக்ஸ், நிஃப்டி கடும் சரிவு! ரூ. 9.5 லட்சம் கோடி இழப்பு!சசிகலாவின் தென்னந்தோப்பு சின்னத்தை இதற்கு முன் வைத்திருந்த கட்சி?சிலிண்டர் தட்டுப்பாடு! கவலையில் கேட்டரிங் நிறுவனங்கள்!இந்திய ரூபாயின் மதிப்பு 92.44 ஆகச் சரிவு!எரிபொருள் தட்டுப்பாடு! எதிர்க்கட்சிகள் அமளியால் மக்களவை ஒத்திவைப்பு!அதிமுகவில் இணைந்தார் காளியம்மாள்! மாநில அந்துஸ்து தராவிட்டால் கூட்டணி இல்லை! பாஜகவுக்கு என்.ஆர். காங்கிரஸ் அழுத்தம்?எரிபொருள் தட்டுப்பாடு! 17 கோடி பீப்பாய் கச்சா எண்ணெய் விடுவித்தது அமெரிக்கா!தென் மாவட்டங்களில் இன்றுமுதல் ஓபிஎஸ் பிரசாரம்!வேளச்சேரி - பரங்கிமலை இடையே பறக்கும் ரயில் சேவை: நாளை முதல் தொடக்கம்
/

மக்கள் நேர்மையின் பக்கம் வாக்களியுங்கள்: கமலஹாசன்

அவிநாசி புதிய பேருந்து நிலையத்தில் திங்கள்கிழமை மக்கள் நீதி மய்யம் கட்சித்தலைவர் கமல்ஹாசன் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டார்.

News image
அவிநாசியில் மக்கள் நீதி மய்யம் கட்சித்தலைவர் கமல்ஹாசன் தேர்தல் பிரசாரம்
Updated On :11 ஜனவரி 2021, 11:33 am

DIN

அவிநாசி புதிய பேருந்து நிலையத்தில் திங்கள்கிழமை மக்கள் நீதி மய்யம் கட்சித்தலைவர் கமல்ஹாசன் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டார்.

அப்போது அவர் பேசியது..

மாற்றத்திற்கான சான்று அவிநாசியில் தெரிகிறது. இது தமிழகத்தில் மாற்றத்தை ஏற்படுத்துவதற்காக நேர்மையாகக் கூடிய கூட்டம். இது கட்சிகளுக்கு உள்ளான போர் அல்ல. நேர்மைக்கும் ஊழலுக்கும் இடையே நடக்கும் போர். இதில், மக்கள் வாக்கு நேர்மையின் பக்கமே இருக்க வேண்டும். முதலை விழுங்கிய பாலகனை சுந்தரர் பாடல் பாடி மீட்டெடுத்த தலம் அவிநாசி. 

தமிழகத்தை பண முதலைகளிடம் இருந்து மீட்டு எடுப்போம். அதற்காக மக்கள் உதவவேண்டும் வாக்களியுங்கள். புதிய வாக்காளர்கள் கரைபடியாதவர்கள். சாதியைப் பார்த்து வாக்களிக்காதீர், சாதிப்பவர்களுக்கு வாக்களியுங்கள். ஏழைகள் ஏழைகளாகவே இருக்க வேண்டும் என்பதற்காக ஆட்சியாளர்கள்  5 வருடத்திற்கு குத்தகைக்கு எடுக்கிறார்கள். அதற்காகவே வறுமைக்கோட்டுக்குக் கீழே வறுமைக்கோட்டுக்குக் கீழே என்று கூறுகிறார்கள். 

நாம் சொல்வதெல்லாம் செழுமை கோட்டிற்கு மேல் என்று தான் மக்களை அழைத்துச் செல்ல உள்ளோம். சாலைகள் குண்டும் குழியுமாக, திறந்த நிலையில் சாக்கடை. மற்ற மாநிலங்களில் இல்லாத அளவுக்குத் தமிழகத்தில் மட்டும் மழை ஆனால் குடிநீருக்குப் பஞ்சம். நீர் மேலாண்மை செய்யக்கூடியவர்கள் பண வசூல் வேட்டையில் ஈடுபட்டு வருகிறார்கள் எனவே தமிழகத்தில் மாற்றத்தை ஏற்படுத்துவோம் தமிழகத்தைச் சீரமைப்போம். நாளை நமதே.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.