மார்ச் 17 முதல் 22 வரை திமுக வேட்பாளர் நேர்காணல்! - துரைமுருகன்காஸாவில் இஸ்ரேல் தாக்குதல்: கர்ப்பிணி, 2 சிறார்கள் உள்பட 12 பேர் பலி!சிறுபான்மையினரின் ஒற்றுமை தமிழ் நாட்டுக்கும் இந்தியாவுக்கும் முக்கியம் : மு.க. ஸ்டாலின்6 மாநில இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு!கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

ஓடிடி படங்கள், தொடர்களுக்கான கட்டுப்பாடுகள் விரைவில் வெளியிடப்படும்: மத்திய அமைச்சர்

ஓடிடி படங்கள், தொடர்களுக்கான கட்டுப்பாடுகள் குறித்து விரைவில் வழிகாட்டுதல்கள் வெளியிடப்படும் என்று மத்திய தகவல் ஒளிபரப்புத் துறை அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் தெரிவித்தார். 

News image
அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர்
Updated On :31 ஜனவரி 2021, 10:20 am

DIN

ஓடிடி தளங்களில் வெளியாகும் படங்கள், தொடர்களுக்கான கட்டுப்பாடுகள் குறித்து விரைவில் வழிகாட்டுதல்கள் வெளியிடப்படும் என்று மத்திய தகவல் ஒளிபரப்புத் துறை அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் தெரிவித்தார். 

ஓடிடியில் வெளியாகும் படங்களையும் தணிக்கை செய்து வெளியிட வேண்டும் என்ற கோரிக்கை ஒரு குறிப்பிட்ட தரப்பில் இருந்து நீண்டநாள்களாக கோரிக்கை வைக்கப்பட்டு வருகிறது. 

இந்த நிலையில் இதுகுறித்து மத்திய தகவல் ஒளிபரப்புத் துறை அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர்,  ஓடிடியில் வெளியாகும் சில தொடர்கள், படங்கள் மீது மத்திய அரசுக்கு பல புகார்கள் வருகின்றன. எனவே, ஓடிடி படங்கள், தொடர்களுக்கான கட்டுப்பாடுகள் குறித்து வழிகாட்டுதல்கள் விரைவில் வெளியிடப்படும் என்று தெரிவித்துள்ளார். 

அலி அப்பாஸ் ஜாபர் இயக்கத்தில் அமேசான் பிரைமில் வெளியான 'தாண்டவ்' என்ற வெப் சீரிஸ் இந்து மதக் கடவுளை இழிவுபடுத்துவதாக அதனை தடை செய்யக் கோரிக்கை வலுத்து வருகின்றன. இது தொடர்பாக மத்திய ஒளிபரப்புத்துறை அமைச்சகம் அமேசானுக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளது குறிப்பிடத்தக்கது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.