பெட்ரோல் பங்க்குகளுக்கு நேரக் கட்டுப்பாடு இல்லை: தமிழக அரசு அறிவிப்பு
தமிழகத்தில் இரவு 10 மணி வரை மட்டுமே பெட்ரோல் பங்க்குகள் செயல்பட அனுமதி வழங்கப்பட்டிருந்த நிலையில் பிப்.1 முதல் நேரக் கட்டுப்பாடின்றி இயங்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது.


தமிழகத்தில் இரவு 10 மணி வரை மட்டுமே பெட்ரோல் பங்க்குகள் செயல்பட அனுமதி வழங்கப்பட்டிருந்த நிலையில் பிப்.1 முதல் நேரக் கட்டுப்பாடின்றி இயங்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் ஜனவரி 31 ஆம் தேதியுடன் ஊரடங்கு முடிவடையும் நிலையில், கூடுதல் தளர்வுகளுடன் பிப்ரவரி 28 ஆம் தேதி வரை நள்ளிரவு 12 மணி வரை ஊரடங்கு நீட்டிக்கப்படுவதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது.
இதில், பிப்.1 முதல் செயல்பட அனுமதி வழங்கப்பட்டுள்ள சில முக்கிய அறிவிப்புகள்:
இரவு 10 மணி வரை மட்டுமே செயல்பட அனுமதிக்கப்பட்டுள்ள பெட்ரோல் பங்க்குகள் நேரக் கட்டுப்பாடின்றி இயங்க அனுமதிக்கப்பட்டுள்ளன.
அதேபோன்று, நிலையான வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி, நீச்சல் குளங்கள் செயல்பட அனுமதி வழங்கப்பட்டுள்ளன.
மத்திய அரசு வெளியிட்டுள்ள நிலையான வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி, ஒன்றுக்கும் மேற்பட்ட திரையரங்குகள் உள்ள திரையரங்கு வளாகங்கள், வணிக வளாகங்களில் உள்ள திரையரங்குகள் உட்பட அனைத்து திரையரங்குகளும் 100 சதவிகித இருக்கைகளை பயன்படுத்தி செயல்பட அனுமதிக்கப்பட்டுள்ளன.
நிலையான வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி, கண்காட்சிக் கூடங்கள் செயல்பட அனுமதி வழங்கி தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்


வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...