எழுத்தாளர் ச.தமிழ்ச்செல்வனுக்கு சாகித்ய அகாதெமி விருது பாஜகவுடன் கூட்டணி பேச்சுவார்த்தை இல்லை; வதந்திகளை நம்ப வேண்டாம்! - தவெகஒளிப்பதிவுக்கான சிறந்த ஆஸ்கர் விருது பெற்ற முதல் பெண்! அவர் சொன்ன ரகசியம்!சிறந்த திரைப்படம் உள்பட 6 ஆஸ்கர் விருதுகளை வென்ற ஒன் பேட்டில் ஆஃப்டர் அனதர்! கதை என்ன?2026ஆம் ஆண்டுக்கான ஆஸ்கர் விருதுகள்! வெற்றியாளர்கள் முழு விவரம்!! தங்கம், வெள்ளி விலை மீண்டும் குறைவுமீண்டும் சென்னை திரும்பிய துபை விமானம் மேற்கு வங்கத்தில் தலைமைச்செயலாளர் மாற்றம்! கட்டாக் மருத்துவமனையில் பயங்கர தீ விபத்து: 10 நோயாளிகள் பலி சென்னை மாதவரத்தில் என்கவுன்டரில் ரௌடி சுட்டுக்கொலை!
/

மானாமதுரை, இளையான்குடி பகுதிகளில் போலியோ சொட்டு மருந்து முகாம்

சிவகங்கை மாவட்டம் மானாமதுரை, இளையான்குடி ஒன்றிய பகுதிகளில் ஞாயிற்றுக்கிழமை போலியோ சொட்டு மருந்து முகாம் நடைபெற்றது.

News image
மானாமதுரை அருகே முத்தனேந்தல் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் குழந்தைகளுக்கு சட்டமன்ற உறுப்பினர் எஸ்.நாகராஜன் போலியோ சொட்டு மருந்து கொடுத்து முகாமைத் தொடங்கி வைத்தார்.
Updated On :31 ஜனவரி 2021, 7:22 am

DIN

மானாமதுரை: சிவகங்கை மாவட்டம் மானாமதுரை, இளையான்குடி ஒன்றிய பகுதிகளில் ஞாயிற்றுக்கிழமை போலியோ சொட்டு மருந்து முகாம் நடைபெற்றது.

மானாமதுரை அருகேயுள்ள முத்தனேந்தல் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் சட்டமன்ற உறுப்பினர் எஸ்.நாகராஜன் குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து கொடுத்து முகாமை தொடங்கி வைத்தார்.

நிகழ்ச்சியில் முத்தனேந்தல் அரசு  அரசு ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவர்கள், செவிலியர்கள், அதிமுக ஒன்றிய செயலாளர் ஜெயபிரகாஷ் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

மேலும், மானாமதுரை ஒன்றிய பகுதியில் பேருந்து நிலையம் மற்றும் பொதுமக்கள் கூடும் இடங்கள், துணை சுகாதார நிலையங்களில் போலியோ சொட்டு மருந்து முகாம் நடைபெற்றது.

தாய்மார்கள்  5 வயதுக்குட்பட்ட தங்கள் குழந்தைகளுடன் போலியோ சொட்டு மருந்து முகாம்களுக்கு வந்து குழந்தைகளுக்கு சொட்டு மருந்து இட்டு சென்றனர்.

இளையான்குடி ஒன்றியம் சாலைக் கிராமம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில்  ஊராட்சி ஒன்றியத் தலைவர் முனியாண்டி, குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து கொடுத்து முகாமைத் தொடங்கி வைத்தார்.

இந்நிகழ்ச்சியில்  ஊராட்சித் தலைவர் தங்கம், மருத்துவர் பகவதி, அதிமுக நிர்வாகிகள், அரசு ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவர்கள் கலந்து கொண்டனர்.

மேலும், இளையான்குடி ஒன்றியப் பகுதி முழுவதும் பொதுமக்கள் கூடும் இடங்களில் சொட்டு மருந்து முகாம்கள் நடைபெற்றன. திருப்புவனம் ஒன்றிய பகுதியிலும் போலியோ சொட்டு மருந்து முகாம்கள் நடைபெற்றன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.