தடுப்பூசிகள் செலுத்திக்கொள்வதில் யாரும் அச்சப்படத் தேவையில்லை: அமைச்சர் மா.சுப்பிரமணியன்
தடுப்பூசிகள் செலுத்திக்கொள்வதில் யாரும் அச்சப்படத் தேவையில்லை என்று மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.


தடுப்பூசிகள் செலுத்திக்கொள்வதில் யாரும் அச்சப்படத் தேவையில்லை என்று மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.
முதல்வரின் அறிவுறுத்தலின்படி மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் 57 நாட்களில் 29 மாவட்டங்களுக்குச் சென்று கரோனா நோய் தடுப்பு முன்னெச்சரிக்கை மற்றும் மருத்துவ கட்டமைப்பை மேம்படுத்துதல் குறித்து ஆய்வு செய்திருக்கிறார். அந்தவகையில் இன்று கடலூர் மாவட்டத்தில் 30வது மாவட்டமாக ஆய்வு மேற்கொண்ட வகையில் இன்று (03-07-2021) தமிழ்நாட்டில் முதலாவதாக பென்னாடம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் கர்ப்பிணி பெண்களுக்கு தடுப்பூசி செலுத்திடும் பணியினை சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி சட்டமன்ற உறுப்பினர் உதயநிதிஸ்டாலின் தொடங்கி வைத்தார்.
அப்போது செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் மா.சுப்பிரமணியன், நேற்றிரவு ஐ.சி.எம்.ஆர் வழிகாட்டு நெறிமுறைகளின்படி ஒன்றிய அரசிடமிருந்து கர்ப்பிணி பெண்களுக்கு தடுப்பூசிகள் போட்டுக்கொள்ளலாம் என்ற அறிவிப்பு வந்துள்ளது. இந்த அறிவிப்பிற்கு பிறகு இன்று (03-7-2021) தமிழகத்திலேயே முதல் முறையாக கடலூர் மாவட்டம், பென்னாடம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் கர்ப்பிணி பெண்களுக்கு கரோனா தடுப்பூசி செலுத்திடும் பணியை, சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி சட்டமன்ற உறுப்பினர் உதயநிதி ஸ்டாலின் தொடங்கி வைத்துள்ளார்.
அநேகமாக இந்தியாவிலேயே முதன்முதலாக கர்ப்பிணி பெண்களுக்கு தடுப்பூசி போடப்படும் பணி பென்னாடம் பகுதியில்தான் தொடங்கிவைக்கப்பட்டிருக்கிறது. இயத தடுப்பூசி போடும் பணியை முதன்முதலில் தொடங்கி வைத்த பெருமை உதயநிதிஸ்டாலினைச் சாரும்.
18 வயது நிரம்பிய அனைவரும் தடுப்பூசியை போட்டுக்கொள்ளலாம். பாலூட்டும் தாய்மார்களுக்கும், கர்ப்பிணி பெண்களுக்கும் தடுப்பூசி செலுத்திடும் பணிகள் நடைபெற்று வருகின்றன. தமிழகத்தில் தொற்றின் வேகம் படிப்படியாக குறையதுகொண்டே வருகிறது. தடுப்பூசிகள் செலுத்திக்கொள்வதில் யாரும் அச்சப்படத் தேவையில்லை. ஏனென்றால் 1.50கோடி பேருக்கும் மேல் தடுப்பூசிகள் செலுத்திக் கொண்டுள்ளனர். தமிழக அரசின் சார்பில் தடுப்பூசி செலுத்துவது குறித்து மிகப் பெரிய அளவில் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டுள்ளது என்றார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...