மேற்கு ஆசிய நிலவரம் : குவைத் இளவரசருடன் பேசிய பிரதமர் மோடி!உலகின் மிகப் பெரிய இயற்கை எரிவாயு வயல் மீது இஸ்ரேல் தாக்குதல்! கத்தார் கண்டனம்!மேடைகளில் ஆபாசங்களையும் அவதூறுகளையும் பேசுகிறார்கள் - முதல்வர் மு.க. ஸ்டாலின்மார்ச் 23-ல் தேமுதிக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்தவெக குறித்து யார், என்ன அவதூறு பரப்பினாலும் நம்ப வேண்டாம் - விஜய்மதச்சார்பற்ற கொள்கையில் சமரசமில்லை, தவெக தலைமையில் ஆட்சி! - விஜய்
/

மானாமதுரையில் தேவேந்திர முன்னேற்ற சங்கம் ஆர்ப்பாட்டம்

மானாமதுரையில் வெள்ளிக்கிழமை தமிழ்நாடு தேவேந்திர முன்னேற்ற சங்கம் மற்றும் தமிழக ஜனநாயகக் கட்சி சார்பில் பழைய பேருந்து நிலையம் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது

News image
மானாமதுரையில் தமிழ்நாடு தேவேந்திர முன்னேற்ற சங்கம் சார்பில் நடைபெற்ற ஆர்ப்பாட்டம்
Updated On :9 ஜூலை 2021, 8:29 am

DIN

மானாமதுரை: சிவகங்கை மாவட்டம் மானாமதுரையில் வெள்ளிக்கிழமை தமிழ்நாடு தேவேந்திர முன்னேற்ற சங்கம் மற்றும் தமிழக ஜனநாயகக் கட்சி சார்பில் பழைய பேருந்து நிலையம் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

உயர்ந்து வரும் பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு விலை உயர்வைக் கண்டித்தும் மத்திய அரசு இந்த விலைகளை கட்டுப்படுத்தக் கோரியும் தமிழகத்தில் தனியார் பள்ளிகள் அதிக கட்டணம் வசூல் செய்வதை கண்டித்தும் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்துக்கு தமிழ்நாடு தேவேந்திர முன்னேற்ற சங்கத்தின் நிறுவனர் பி. சிவசங்கரி தலைமை தாங்கினார். ஆர்ப்பாட்டத்தில் சமையல் எரிவாயு உருளைக்கு மாலை அணிவித்து ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது.

ஆர்ப்பாட்டத்தில் சங்கத்தின் நிர்வாகிகள் கவி, பாஸ்கரன், தமிழக ஜனநாயக் கட்சி நிர்வாகி யூசுப் அன்சாரி உள்ளிட்டோர் கலந்து கொண்டு பேசினர்.

ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றவர்கள் பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு விலை உயர்வுக்கு எதிராகவும் தனியார் பள்ளிகளில் மாணவர்களிடம் அதிக கட்டணம் வசூல் செய்வதைக் கண்டித்தும் முழக்கங்கள் எழுப்பினர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.