தேயிலைத் தோட்டத் தொழிலாளர்களுடன் ராகுல் கலந்துரையாடல்!வீட்டில் தங்க அனுமதி வேண்டும்! நீதிமன்றத்தில் விஜய்யின் மனைவி சங்கீதா இடைக்கால மனு!ஆளுநர் ஆர்.என். ரவியுடன் முதல்வர் மு.க. ஸ்டாலின் சந்திப்பு!திருச்சி மாநாட்டில் பங்கேற்க தொண்டர்களுக்கு மு.க. ஸ்டாலின் அழைப்பு!5 நாள்களுக்குப் பிறகு தங்கம் விலை சவரனுக்கு ரூ. 720 உயர்வு!அதிரடியாக வீட்டு உபயோக, வணிகப் பயன்பாட்டுக்கான சிலிண்டர் விலை உயர்வு!சமையல் எரிவாயு உற்பத்தியை அதிகரிக்க மத்திய அரசு அவசரகால உத்தரவு
/

தமிழகத்துக்கு காவிரி என்பது வாழ்வுரிமை: முதல்வர் ஸ்டாலின்

தமிழகத்துக்கு காவிரி என்பது வாழ்வுரிமையாகும் என்று கூறியிருக்கும் தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின், காவிரி என்பது கர்நாடகத்துக்கு மட்டுமல்ல தமிழகத்துக்கும் முழு உரிமை கொண்டது என்று குறிப்பிட்டுள்ளார்.

News image
தமிழகத்துக்கு காவிரி என்பது வாழ்வுரிமை: முதல்வர் ஸ்டாலின்
Updated On :12 ஜூலை 2021, 8:26 am

DIN


சென்னை: தமிழகத்துக்கு காவிரி என்பது வாழ்வுரிமையாகும் என்று கூறியிருக்கும் தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின், காவிரி என்பது கர்நாடகத்துக்கு மட்டுமல்ல தமிழகத்துக்கும் முழு உரிமை கொண்டது என்று குறிப்பிட்டுள்ளார்.

மேக்கேதாட்டு விவகாரம் குறித்து ஆலோசிக்க, சென்னை தலைமைச் செயலகத்தில் இன்று அனைத்துக் கட்சிக் கூட்டத்தை கூட்டியிருந்தார் முதல்வர் மு.க. ஸ்டாலின்.

இந்தக் கூட்டத்தில் பேசிய முதல்வர் ஸ்டாலின், மேக்கேதாட்டு அணையால் தமிழகத்துக்கு பாதிப்பில்லை என்று கர்நாடகம் கூறுவதில் துளியளவும் உண்மையில்லை. 

தமிழ்நாட்டிற்கு காவிரி என்பது வாழ்வுரிமை என்பதால், மேக்கேதாட்டுவில் அணை கட்டினால் தமிழக விவசாயிகள் பாதிக்கப்படுவார்கள். கர்நாடகத்துக்கு மட்டுமல்ல தமிழகத்துக்கும் காவிரியாறு முழு உரிமை கொண்டது. கர்நாடகத்தை விட தமிழகத்தில்தான் அதிகமான நீளத்துக்கு காவிரி பாய்கிறது. தமிழக விவசாயிகள் பாதிக்கப்படுவார் என்பதாலேயே அனைத்துக் கட்சிக் கூட்டத்துக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

வழக்கமான காலத்திலேயே காவிரியில் நமக்குத் தர வேண்டிய தண்ணீரை கர்நாடகம் தருவதில்லை. மேக்கேதாட்டு அணையை கட்டிவிட்டால் எப்படி தமிழகத்தக்குத் தண்ணீர் கிடைக்கும். கர்நாடகத்திலிருந்து நமக்குக் கிடைக்க வேண்டிய தண்ணீர் இந்த அணையில் தேக்கிவைக்கப்படும் என்று தெரிவித்துள்ளார்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.