தேயிலைத் தோட்டத் தொழிலாளர்களுடன் ராகுல் கலந்துரையாடல்!வீட்டில் தங்க அனுமதி வேண்டும்! நீதிமன்றத்தில் விஜய்யின் மனைவி சங்கீதா இடைக்கால மனு!ஆளுநர் ஆர்.என். ரவியுடன் முதல்வர் மு.க. ஸ்டாலின் சந்திப்பு!திருச்சி மாநாட்டில் பங்கேற்க தொண்டர்களுக்கு மு.க. ஸ்டாலின் அழைப்பு!5 நாள்களுக்குப் பிறகு தங்கம் விலை சவரனுக்கு ரூ. 720 உயர்வு!அதிரடியாக வீட்டு உபயோக, வணிகப் பயன்பாட்டுக்கான சிலிண்டர் விலை உயர்வு!சமையல் எரிவாயு உற்பத்தியை அதிகரிக்க மத்திய அரசு அவசரகால உத்தரவு
/

தமிழகத்தில் புதிதாக 2,505 பேருக்கு கரோனா

தமிழகத்தில் கடந்த 24 மணிநேரத்தில் 2,505 பேருக்கு கரோனா இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.

News image
Updated On :13 ஜூலை 2021, 2:46 pm

DIN

தமிழகத்தில் கடந்த 24 மணிநேரத்தில் 2,505 பேருக்கு கரோனா இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.

இதைத்தொடர்ந்து, தமிழகத்தில் மொத்தம் பாதித்தோர் எண்ணிக்கை 25,23,943ஆக உயர்ந்துள்ளது.

அதிகபட்சமாக கோவையில் 282, ஈரோட்டில் 187, தஞ்சாவூர் 185, சேலம் 162, சென்னை 160 பேருக்கு கரோனா பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.

கடந்த 24 மணிநேரத்தில் கரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சைப் பெற்று வந்த 48 பேர் பலியாகியுள்ளனர். இதைத் தொடர்ந்து, மொத்த பலி எண்ணிக்கை 33,502ஆக உயர்ந்துள்ளது.

மேலும் 3,058 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதுவரை மொத்தம் 24,59,223 பேர் நோய்த் தொற்றிலிருந்து குணமடைந்துள்ளனர். தற்போது மருத்துவமனையில் 31,218 பேர் சிகிச்சைப் பெற்று வருகின்றனர்.

இன்று ஒரே நாளில் 1,39,113 பேருக்கு கரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.