பாஜகவுடன் கூட்டணி பேச்சுவார்த்தை இல்லை; வதந்திகளை நம்ப வேண்டாம்! - தவெகஒளிப்பதிவுக்கான சிறந்த ஆஸ்கர் விருது பெற்ற முதல் பெண்! அவர் சொன்ன ரகசியம்!சிறந்த திரைப்படம் உள்பட 6 ஆஸ்கர் விருதுகளை வென்ற ஒன் பேட்டில் ஆஃப்டர் அனதர்! கதை என்ன?2026ஆம் ஆண்டுக்கான ஆஸ்கர் விருதுகள்! வெற்றியாளர்கள் முழு விவரம்!! தங்கம், வெள்ளி விலை மீண்டும் குறைவுமீண்டும் சென்னை திரும்பிய துபை விமானம் மேற்கு வங்கத்தில் தலைமைச்செயலாளர் மாற்றம்! கட்டாக் மருத்துவமனையில் பயங்கர தீ விபத்து: 10 நோயாளிகள் பலி சென்னை மாதவரத்தில் என்கவுன்டரில் ரௌடி சுட்டுக்கொலை!
/

கம்பம்: கரோனாவிற்கு சிறப்பு சார்பு ஆய்வாளர் பலி

தேனி மாவட்டம் குள்ளப்ப கவுண்டன்பட்டியைச் சேர்ந்த சிறப்பு சார்பு ஆய்வாளர் ஜெ.அழகேசன் கரோனா தொற்றால் திங்கள்கிழமை உயிரிழந்தார்.

News image
Updated On :13 ஜூலை 2021, 8:34 am

DIN

கம்பம்: தேனி மாவட்டம் குள்ளப்ப கவுண்டன்பட்டியைச் சேர்ந்த சிறப்பு சார்பு ஆய்வாளர் ஜெ.அழகேசன் கரோனா தொற்றால் திங்கள்கிழமை உயிரிழந்தார்.

தேனி மாவட்டம் குள்ளப்ப கவுண்டன்பட்டியைச் சேர்ந்தவர் ஜெயராமன் மகன் அழகேசன் (50). இவர் சிறப்பு சார்பு ஆய்வாளராக நெடுஞ்சாலை ரோந்து வாகனத்தில் பணியில் இருந்தார்.

மனைவி பரிமளா (41), மகள் நிகிதா(19), மகன் பாலாஜி (14), ஆகியோருடன் கம்பத்தில் காவலர் குடியிருப்பில் வசித்து வந்தார்.

கடந்த ஜூன் 30-ல் கரோனா பரிசோதனை எடுத்தார். ஜூலை 2-ல் கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. அதன்பேரில் ஜூலை 4 ல் உத்தமபாளையம் அருகே உள்ள கரோனா தனிமை சிகிச்சை மையத்தில் சேர்ந்து சிகிச்சை பெற்றார்.

ஜூலை 8-ல் மூச்சுத்திணறல் காரணமாக தேனி மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் கரோனா மையத்தில் அனுமதிக்கப்பட்டார்.

இந்நிலையில் அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டும் பலனின்றி  திங்கள் கிழமை உயிரிழந்தார். 

உடல்  அடக்கம் சொந்த ஊரான குள்ளப்பகவுண்டன்பட்டியில் செவ்வாய் கிழமை நடைபெற்றது. 21 குண்டுகள் முழங்க காவலர் அணிவகுப்பு மரியாதை செய்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.