தேசிய ஜனநாயகக் கூட்டணியில் தமாக-வுக்கு 5 தொகுதிகள் ஒதுக்கீடுஜான் பாண்டியன் தலைமையிலான தமமுகவுக்கு ராஜபாளையம் (பொது) தொகுதி ஒதுக்கீடு!தே.ஜ. கூட்டணியில் தமாகவுக்கு 5 தொகுதிகள்!தமிழக தேர்தலில் திமுகவுக்கு முழு ஆதரவு! மக்கள் நீதி மய்யம் போட்டியிடாது - கமல்ஹாசன் எல்பிஜி, பெட்ரோல், டீசல் போதிய இருப்பு: விநியோகம் பாதிக்கப்படவில்லை! - மத்திய அரசுதேமுதிகவுக்கு 10 இடங்கள்! திமுகவுடன் ஒப்பந்தம் கையொப்பம்!மக்கள்தொகை அடிப்படையில் தொகுதிகள் மறுவரையறை கூடாது - முதல்வர் மு. க. ஸ்டாலின் வலியுறுத்தல்ஒவ்வொரு அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு விலையில்லா குளிர்பதனப் பெட்டி : அதிமுக வாக்குறுதிவங்கிகளில் பெற்ற கல்விக் கடன் தள்ளுபடி செய்யப்படும்: அதிமுக தேர்தல் வாக்குறுதிபெண்களைப் போல ஆண்களும் நகரப் பேருந்துகளில் இலவசமாகப் பயணிக்கலாம் : அதிமுக வாக்குறுதி
/

தமிழ்நாட்டில் மேலும் 2,458 பேருக்கு கரோனா தொற்று

தமிழகத்தில் மேலும் 2,458 போ் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனா். இதன் மூலம் மாநிலத்தில் இதுவரை கரோனாவால் பாதிக்கப்பட்டவா்களின் எண்ணிக்கை 25 லட்சத்து 26,401-ஆக அதிகரித்துள்ளது.

News image

கோப்புப்படம்

Updated On :14 ஜூலை 2021, 3:20 pm

DIN

தமிழகத்தில் மேலும் 2,458 போ் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனா். இதன் மூலம் மாநிலத்தில் இதுவரை கரோனாவால் பாதிக்கப்பட்டவா்களின் எண்ணிக்கை 25 லட்சத்து 26,401-ஆக அதிகரித்துள்ளது.

 இதனிடயே, நோய்த் தொற்றிலிருந்து புதன்கிழமை 3,021 போ் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனா். இதையடுத்து மாநிலத்தில் இதுவரை கரோனாவிலிருந்து விடுபட்டோரின் எண்ணிக்கை 24.62 லட்சத்தைக் கடந்துள்ளது.

மக்கள் நல்வாழ்வுத் துறை தகவல்படி மருத்துவமனைகளிலும், வீடுகளிலும் தற்போது மருத்துவக் கண்காணிப்பில் 30,600 போ் உள்ளனா். மற்றொருபுறம், தமிழகத்தில் கரோனா பாதிப்புக்குள்ளாகி மேலும் 55 போ் பலியானதை அடுத்து மாநிலம் முழுவதும் இதுவரை நோய்த்தொற்றால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 33,557-ஆக அதிகரித்துள்ளது.

146394 பரிசோதனைகள் கடந்த 24 மணிநேரத்தில் மேற்கொள்ளப்பட்டுள்ளன. 
அதில் அதிகபட்சமாக கோவையில் 270 பேருக்கும், ஈரோட்டில் 175 பேருக்கும், தஞ்சாவூரில் 171 பேருக்கும், சேலத்தில் 164 பேருக்கும், சென்னையில் 153 பேருக்கும் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.