தமிழகத்தில் இன்று மேலும் 2,405 பேருக்கு கரோனா; 49 போ் பலி
தமிழகத்தில் இன்று மேலும் 2,405 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.


தமிழகத்தில் இன்று மேலும் 2,405 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதுகுறித்து மாநில சுகாதாரத்துறை வெளியிட்ட செய்திக்குறிப்பில், கடந்த 24 மணிநேரத்தில் 1,46,665 மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டன. அவற்றில் புதிதாக 2,405 பேருக்கு தொற்று கண்டறியப்பட்டுள்ளது.
அதில் அதிகபட்சமாக கோவையில் 256 பேருக்கும், ஈரோட்டில் 159 பேருக்கும், தஞ்சாவூரில் 163 பேருக்கும், சேலத்தில் 155 பேருக்கும், சென்னையில் 148 பேருக்கும் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதன் மூலம் மாநிலத்தில், இதுவரை கரோனாவால் பாதிக்கப்பட்டவா்களின் எண்ணிக்கை 25,28,806-ஆக அதிகரித்துள்ளது. இதனிடயே, நோய்த் தொற்றிலிருந்து இன்று 3,006 போ் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனா்.
இதையடுத்து மாநிலத்தில் இதுவரை கரோனாவிலிருந்து விடுபட்டோரின் எண்ணிக்கை 24.65 லட்சத்தைக் கடந்துள்ளது. மக்கள் நல்வாழ்வுத் துறை தகவல்படி மருத்துவமனைகளிலும், வீடுகளிலும் தற்போது மருத்துவக் கண்காணிப்பில் 29,950 போ் உள்ளனா்.
மற்றொருபுறம், தமிழகத்தில் கரோனா பாதிப்புக்குள்ளாகி மேலும் 49 போ் பலியானதை அடுத்து மாநிலம் முழுவதும் இதுவரை நோய்த் தொற்றால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 33,606-ஆக அதிகரித்துள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது


வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...