புதுச்சேரியில் சுதந்திர நாளுக்குள் கரோனா கட்டுப்படுத்தப்படும்: தமிழிசை
புதுவையில் ஆகஸ்ட் 15-ஆம் தேதி தேசியக்கொடி ஏற்றும் போது, கரோனா இறக்கப்பட்டு இருக்குமென துணைநிலை ஆளுநர் தமிழிசை நம்பிக்கை தெரிவித்தார்.


புதுவையில் ஆகஸ்ட் 15-ஆம் தேதி தேசியக்கொடி ஏற்றும் போது, கரோனா இறக்கப்பட்டு இருக்குமென துணைநிலை ஆளுநர் தமிழிசை நம்பிக்கை தெரிவித்தார்.
புதுச்சேரியில் டெங்கு பரவலை கட்டுப்படுத்தும் வகையில், வெள்ளிக்கிழமை ஆளுநர் மாளிகை முன்பு டெங்கு ஒழிப்பு விழிப்புணர்வு பேரணியை, துணைநிலை ஆளுநர் தமிழிசை சௌந்தர்ராஜன் கொடியசைத்து துவக்கி வைத்தார்.
பின்பு செய்தியாளர்களை சந்தித்த ஆளுநர் கூறியதாவது, குழந்தைகளுக்கு ஏற்கனவே பாதிக்கப்பட்டது போல தான், தற்போதும் பாதிப்பு உள்ளது. குழந்தைகளுக்கான வார்டுகள், ஆக்சிஜன் படுக்கைகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.

குழந்தைகளை பாதுகாக்க பெற்றோர்கள் முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்க வேண்டும். கரோனா பாதிப்பு இல்லாத வகையில் குழந்தைகள் சிகிச்சை பெற்று சென்று வருகின்றனர்.
உயரிழப்பு போன்றவை இல்லாத வகையில், அனைத்து பாதுகாப்பு சிகிச்சை நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. கரோனா 3-வது அலை வராது என்று நாம் கூற முடியாது. குழந்தைகளை அதிகம் தாக்கினால் அவற்றை எதிர்கொள்ளவும், பாதுகாக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. எனவே அனைவரும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.
ஆகஸ்ட் 15ல் சுதந்திர நாளையொட்டி தேசிய கொடியேற்றும் போது, கரோனா இறக்கப்பட்டிருக்க வேண்டும் என்றார். நிகழ்ச்சியில் சுகாதாரத்துறை அதிகாரிகள், மருத்துவர்கள், செவிலியர்கள் கலந்து கொண்டனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...