சாத்தூர் அருகே பட்டாசு ஆலையில் பயங்கர வெடிவிபத்து!இந்திய பங்குச் சந்தை வீழ்ச்சி! சென்செக்ஸ் 1,600 புள்ளிகள் சரிவு!ஹோர்முஸ் நீரிணை இன்றே முற்றுகை! டிரம்ப் அறிவிப்பு கச்சா எண்ணெய் விலை 7% உயர்வு! மீண்டும் 100 டாலரைத் தாண்டியது! கடிதத்தைப் பொதுவில் வெளியிடத் தயாரா? நிர்மலா சீதாராமனுக்கு ஸ்டாலின் சவால்!
/

பாலியல் வழக்கு: சிவசங்கர் பாபா ஜாமீன் மனு தள்ளுபடி

பாலியல் வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ள சிவசங்கர் பாபாவின் ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்து செங்கல்பட்டு சிறப்பு போக்சோ நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

News image
Updated On :19 ஜூலை 2021, 12:54 pm

பாலியல் வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ள சிவசங்கர் பாபாவின் ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்து செங்கல்பட்டு சிறப்பு போக்சோ நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

பாலியல் வழக்கில் ஜாமீன் கோரி சிவசங்கர் பாபா தரப்பில் அவரது உதவியாளர் சுஷ்மிதா செங்கல்பட்டு நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்திருந்தார். 

இதன் மூலம் 2 போக்சோ வழக்குகளிலும் சிவசங்கர் பாபாவின் ஜாமீன் மனுவை நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.

சென்னை கேளம்பாக்கம் சுஷில்ஹரி பள்ளி நிறுவனர் சிவசங்கர் பாபா மீது பள்ளி மாணவிகள் பாலியல்  குற்றச்சாட்டுகளை முன்வைத்தனர். 

அதனடிப்படையில் குழந்தைகள் பாதுகாப்பு ஆணையம் நேரடியாக விசாரணை நடத்தி மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த புகாரின் அடிப்படையில் சிவசங்கர் பாபா உள்ளிட்ட சிலர் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டது. மேலும் இந்த வழக்கு சிபிசிஐடி-க்கு மாற்றப்பட்டது.

பின்னர் தில்லியில் பதுங்கியிருந்த சிவசங்கர் பாபா கைது செய்யப்பட்டு சென்னைக்கு கொண்டு வரப்பட்டார். அதனையடுத்து, செங்கல்பட்டு மகிளா நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி செங்கல்பட்டு மாவட்ட சிறையில் 15 நாள் நீதிமன்றக் காவலில் அடைக்கப்பட்டார்.

இதனைத்தொடர்ந்து அவர் மீது மேலும் ஒரு வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. பள்ளி சுற்றுலாவுக்கு அழைத்துச் செல்வதாகக் கூறி மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக இரண்டாவது முறை போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டது.

இது தொடர்பாக விசாரணை நடத்திய செங்கல்பட்டு சிறப்பு போக்சோ நீதிமன்றம், சிவசங்கர் பாபாவுக்கு வரும் 27-ம் தேதி வரை நீதிமன்ற காவல் விதித்து உத்தரவிட்டிருந்தது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.