கட்சியின் பெயரை அறிவித்தார் சசிகலா!பங்குச்சந்தை: சென்செக்ஸ், நிஃப்டி கடும் சரிவு! ரூ. 9.5 லட்சம் கோடி இழப்பு!சசிகலாவின் தென்னந்தோப்பு சின்னத்தை இதற்கு முன் வைத்திருந்த கட்சி?சிலிண்டர் தட்டுப்பாடு! கவலையில் கேட்டரிங் நிறுவனங்கள்!இந்திய ரூபாயின் மதிப்பு 92.44 ஆகச் சரிவு!எரிபொருள் தட்டுப்பாடு! எதிர்க்கட்சிகள் அமளியால் மக்களவை ஒத்திவைப்பு!அதிமுகவில் இணைந்தார் காளியம்மாள்! மாநில அந்துஸ்து தராவிட்டால் கூட்டணி இல்லை! பாஜகவுக்கு என்.ஆர். காங்கிரஸ் அழுத்தம்?எரிபொருள் தட்டுப்பாடு! 17 கோடி பீப்பாய் கச்சா எண்ணெய் விடுவித்தது அமெரிக்கா!
/

பரோலில் வந்த தண்டனைக் கைதி தற்கொலை

வேலூா் சிறையில் இருந்து பரோலில் சென்ற கொலை வழக்கின் தண்டனைக் கைதி தற்கொலை செய்து கொண்டார். இதுதொடர்பாக வேலூர் விருப்பாச்சி புரம் போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

News image
கோப்புப்படம்
Updated On :21 ஜூலை 2021, 5:20 am

DIN


வேலூா் சிறையில் இருந்து பரோலில் சென்ற கொலை வழக்கின் தண்டனைக் கைதி தற்கொலை செய்து கொண்டார். இதுதொடர்பாக வேலூர் விருப்பாச்சி புரம் போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

வேலூா் விருப்பாட்சிபுரத்தைச் சோ்ந்தவா் வேலு என்கிற வேல்முருகன் (27). இவா் 2012 ஆம் ஆண்டு ஓட்டேரியில் ஆடு மேய்த்த மூதாட்டியை கொலை செய்து நகை பறித்துச் சென்ற வழக்கில், கைது செய்யப்பட்டாா். இந்த வழக்கில் தண்டனை பெற்ற வேல்முருகன், புதுக்கோட்டை சிறையில் அடைக்கப்பட்டாா். பின்னா் 2017-ஆம் ஆண்டில் வேலூா் மத்தியச் சிறைக்கு மாற்றப் பட்டாா்.

இந்த நிலையில், தனது தாயாருக்கு உடல்நலம் சரியில்லை எனக்கூறி பரோல் கேட்டு வேல்முருகன் விண்ணப்பித்திருந்தாா். அவருக்கு 4 நாள் பரோல் வழங்கப்பட்டது. அதன்பேரில், கடந்த 15 ஆம் தேதி சிறையில் இருந்து சென்ற வேல்முருகன், திங்கள்கிழமை காலை மீண்டும் சிறைக்கு வந்திருக்க வேண்டும். ஆனால் அவா் சிறைக்கு திரும்பவில்லை.

இதுதொடா்பாக, வேலூா் சிறை அதிகாரிகள் அளித்த புகாரின்பேரில், பாகாயம் போலீஸாா் வழக்குப் பதிந்து, வேல்முருகனை தேடி வந்தனா்.

இந்நிலையில், வேல்முருகன் தனது வீட்டின் பின்புறம் தற்கொலை செய்து கொண்டார். இதுதொடர்பாக வேலூர் விருப்பாச்சிபுரம் போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.