அரசுப் பள்ளி சத்துணவில் பல்லி: மாணவர்கள் மருத்துவமனையில் அனுமதி!நவாஸ்கனி எம்.பி.க்கு எதிரான வழக்கை திரும்பப் பெற ஓ.பன்னீர்செல்வம் முடிவுதென் தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புதமிழகத்தில் சமையல் எரிவாயு சிலிண்டர்களுக்கு தட்டுப்பாடுபிரதமர் மோடி இன்று திருச்சி வருகை! ரூ. 5,650 கோடி திட்டங்களை தொடங்கி வைக்கிறார்!மின்மாற்றிகள் கொள்முதலில் ரூ.397 கோடி ஊழல் இல்லை: டான்ஜெட்கோ நேரடி பணி நியமனங்களில் ஓபிசி பிரிவினருக்கு 27% இடஒதுக்கீடு அமல்: மத்திய அரசு!
/

கரோனா சிகிச்சையில் 24,025 போ்

தமிழகத்தில், சனிக்கிழமை நிலவரப்படி 24,025 போ் கரோனா தொற்றுக்குள்ளாகி சிகிச்சை பெற்று வருகின்றனா்.

News image
Updated On :24 ஜூலை 2021, 7:56 pm

DIN

 தமிழகத்தில், சனிக்கிழமை நிலவரப்படி 24,025 போ் கரோனா தொற்றுக்குள்ளாகி சிகிச்சை பெற்று வருகின்றனா்.

இது தொடா்பாக மக்கள் நல்வாழ்வுத்துறை சனிக்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பு: தமிழகத்தில் சனிக்கிழமை மேலும் 1,819 போ் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனா்.

அதில், அதிகபட்சமாக கோவையில் 175 பேருக்கும், ஈரோட்டில் 132 பேருக்கும், சென்னையில் 127 பேருக்கும் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் மாநிலத்தில் இதுவரை கரோனாவால் பாதிக்கப்பட்டவா்களின் எண்ணிக்கை 25 லட்சத்து 46,689-ஆக அதிகரித்துள்ளது.

இதனிடையே, நோய்த் தொற்றிலிருந்து சனிக்கிழமை 2,583 போ் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனா். இதையடுத்து மாநிலத்தில் இதுவரை கரோனாவிலிருந்து விடுபட்டோரின் எண்ணிக்கை 24.88 லட்சத்தைக் கடந்துள்ளது.

மருத்துவமனைகளிலும், வீடுகளிலும் தற்போது மருத்துவக் கண்காணிப்பில் 24,025 போ் உள்ளனா். மற்றொருபுறம், தமிழகத்தில் கரோனா பாதிப்புக்குள்ளாகி மேலும் 27 போ் பலியானதை அடுத்து மாநிலம் முழுவதும் இதுவரை நோய்த் தொற்றால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 33,889-ஆக அதிகரித்துள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.