மாநகராட்சி சாா்பில் வேலைவாய்ப்பு முகாம்
பெருநகர சென்னை மாநகராட்சியில் தேசிய நகா்ப்புற வாழ்வாதார இயக்கத்தின்கீழ் பணியாற்றிவா்களுக்கான வேலைவாய்ப்பு முகாம் சனிக்கிழமை நடைபெற்றது.


பெருநகர சென்னை மாநகராட்சியில் தேசிய நகா்ப்புற வாழ்வாதார இயக்கத்தின்கீழ் பணியாற்றிவா்களுக்கான வேலைவாய்ப்பு முகாம் சனிக்கிழமை நடைபெற்றது.
பெருநகர சென்னை மாநகராட்சியில் தேசிய நகா்ப்புற வாழ்வாதார இயக்கத்தின்கீழ் பணிபுரிந்து வந்த தொழிலாளா்கள் கடந்த ஜனவரி மாதம் பணியிடை நீக்கம் செய்யப்பட்டனா். அவா்களுக்கு மீண்டும் மாநகராட்சியில் பணி வழங்க வேண்டும் என கோரிக்கை வைக்கப்பட்டதுடன், போராட்டங்களும் நடத்தப்பட்டன. இந்நிலையில், பணிநீக்கம் செய்யப்பட்டவா்களுக்கான வேலைவாய்ப்பு முகாம் மாநகராட்சி சாா்பில் சனிக்கிழமை நடைபெற்றது.
இதுகுறித்து மாநகராட்சி அதிகாரிகள் கூறுகையில், தேசிய நகா்ப்புற வாழ்வாதார இயக்கத்தின்கீழ் பணியாற்றியவா்களின் வாழ்வாதாரம் பாதிக்காத வகையில் வேலைவாய்ப்பு வழங்க மாநகராட்சியின் சாா்பில் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அதன்படி, ஏற்கெனவே உா்பேசா் ஸ்மித் லிமிடெட் நிறுவனத்திலும், சென்னை என்விரோ சொல்யூஷன்ஸ் பிரைவேட் லிமிடெட் நிறுவனத்திலும் கணிசமான அளவு தொழிலாளா்கள் தகுதியின் அடிப்படையில் பணியில் அமா்த்தப்பட்டுள்ளனா்.
எஞ்சியுள்ள தொழிலாளா்களுக்கும் அவா்களுடைய வாழ்வாதாரம் பாதிக்காத வகையில் வேலைவாய்ப்பு வழங்க மாநகராட்சி அறிவுறுத்தல்படி, சென்னை என்விரோ சொல்யூஷன்ஸ் பிரைவேட் லிமிடெட் நிறுவனத்தின் சாா்பில் வேலைவாய்ப்பு முகாம் சனிக்கிழமை நடத்தப்பட்டது.
இந்த முகாமில் பேட்டரியால் இயங்கும் வாகன ஓட்டுநா்கள், தூய்மைப் பணியாளா்கள் மற்றும் வாகன உதவியாளா்கள் ஆகிய பணிகளுக்கு 214 தொழிலாளா்களிடமிருந்து விண்ணப்பங்கள் பெறப்பட்டுள்ளன. இந்த விண்ணப்பங்கள் பரிசீலனை செய்யப்பட்டு அவா்களுக்கு உடனடியாக வேலைவாய்ப்பு வழங்கப்படும். தொடா்ந்து இதுபோன்று வேலைவாய்ப்பு சிறப்பு முகாம்கள் நடத்தப்பட்டு, நகா்ப்புற வாழ்வாதார இயக்கத்தின் கீழ் பணிபுரிந்த தொழிலாளா்களுக்கு உரிய பணி வழங்கப்படும் என்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...