காரமடை ரோட்டரி சங்கம் சார்பில் இலவச மஞ்சள் காமாலை தடுப்பூசி, விழிப்புணர்வு நிகழ்ச்சி

காரமடை ரோட்டரி சங்கம் சார்பில் இலவச மஞ்சள் காமாலை தடுப்பூசி, விழிப்புணர்வு நிகழ்ச்சி

கோவை மாவட்டம் காரமடை அருகே திம்மம்பாளையம் ஊராட்சி ஒன்றிய நடுநிலையத்தில் பள்ளியில் இலவச மஞ்சள் காமாலை தடுப்பூசி மற்றும் விழிப்புணர்வு நிகழ்ச்சியும் நடைபெற்றது. 
Published on

கோவை மாவட்டம் காரமடை அருகே திம்மம்பாளையம் ஊராட்சி ஒன்றிய நடுநிலையத்தில் பள்ளியில் உலக மஞ்சள் காமாலை தினத்தை முன்னிட்டு காரமடை ரோட்டரி சங்கம் சார்பில் இலவச மஞ்சள் காமாலை தடுப்பூசி மற்றும் விழிப்புணர்வு நிகழ்ச்சியும் நடைபெற்றது.

சிக்காரம்பாளையம் ஊராட்சி மன்றத் தலைவரும், காரமடை ரோட்டரி சங்கத் தலைவருமான ஞானசேகரன் தலைமையில் நிகழ்ச்சி நடைபெற்றது. முன்னதாக ரோட்டரி சங்க செயலாளர் விஜயபிரபு வரவேற்றுப் பேசினார். பட்டைய தலைவர் சிவசதீஷ்குமார், ரோட்டரி சங்க துணை ஆளுநர் டாக்டர் விஜயகிரி, பட்டைய செயலாளர் மகேஷ், திட்டத் தலைவர் தினகரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

நிகழ்ச்சியில் காரமடை செளமியா மருத்துவமனை டாக்டர் ஜெயராமன் மற்றும் மருந்துவமனை செவிலியர்கள், மருத்துவப் பரிசோதனை செய்து இலவச மஞ்சள் காமாலை தடுப்பூசியை பொதுமக்களுக்கு செலுத்தினர்.இதில் ரோட்டரி சங்க நிர்வாகி செளமியா சதிஷ், பள்ளி ஆசிரியைகள், பொதுமக்கள் என பலர் கலந்து கொண்டனர். முடிவில் காரமடை ரோட்டரி சங்க பொருளாளர் குருபிரசாத் நன்றி கூறினார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

X
Dinamani
www.dinamani.com