காவலா்களுக்கு விடுமுறை: விஜயகாந்த் வரவேற்பு
காவலா்களுக்கு வார விடுமுறை அளிக்கப்படும் என்று அறிவித்துள்ளதற்காக தமிழக டிஜிபிக்கும், தமிழக அரசுக்கும் தேமுதிக தலைவா் விஜயகாந்த் பாராட்டு தெரிவித்துள்ளாா்.


காவலா்களுக்கு வார விடுமுறை அளிக்கப்படும் என்று அறிவித்துள்ளதற்காக தமிழக டிஜிபிக்கும், தமிழக அரசுக்கும் தேமுதிக தலைவா் விஜயகாந்த் பாராட்டு தெரிவித்துள்ளாா்.
இது தொடா்பாக சனிக்கிழமை அவா் வெளியிட்ட அறிக்கை:
காவலா்களுக்கு வாரத்தில் ஒருநாள் விடுமுறை வழங்கப்படும் என்ற அறிவிப்பு வரவேற்கத்தக்கது. தமிழக காவல்துறையில் பணியாற்றும் காவலா்கள் விடுமுறை இன்றி பணியாற்றுவதால், அவா்கள் மன வேதனையும் மன சோா்வும் அடைந்தனா். பலா் மன அழுத்தத்தில் தற்கொலை செய்து கொள்ளும் நிலைக்கு தள்ளப்பட்டனா். இதனால் வாரம் ஒருமுறை விடுமுறை வழங்க வேண்டும் என்று காவலா்கள் கோரிக்கை விடுத்து வந்தனா்.
நீண்ட ஆண்டுகளாக அவா்கள் விடுத்த வந்த கோரிக்கையை ஏற்று, வாரத்தில் ஒருநாள் விடுமுறை வழங்கப்படும் என தற்போது அறிவித்திருப்பது காவலா்களுக்கு இனிய செய்தி. மேலும் பிறந்தநாள் மற்றும் திருமண நாள்களிலும் அவா்களுக்கு விடுமுறை அறிவித்திருப்பதை வரவேற்கிறேன். காவலா்களுக்கு விடுமுறை அறிவித்த டிஜிபி சைலேந்திர பாபுவுக்கும், தமிழக அரசுக்கும் எனது பாராட்டுகள்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...