கார்த்தி சிதம்பரம் எம்பி அலுவலகம் மீது பெட்ரோல் குண்டுவீச்சு! ஹோர்முஸ் நீரிணையில் கண்ணிவெடி பதிக்கும் 16 ஈரான் கப்பல்களை அழித்த அமெரிக்கா! தமிழ்நாட்டில் இருந்து புறப்பட்டார் ஆளுநர் ஆர்.என். ரவி! மேற்கு வங்க ஆளுநராக ஆர்.என்.ரவி நாளை பதவியேற்பு!நீட் தேர்வுக்கு விண்ணப்பிக்க இன்றே கடைசி நாள்!தமிழ்நாட்டில் மீண்டும் 'அம்மா' ஆட்சி: பியூஷ் கோயல்அரசுப் பள்ளி சத்துணவில் பல்லி: மாணவர்கள் மருத்துவமனையில் அனுமதி!நவாஸ்கனி எம்.பி.க்கு எதிரான வழக்கை திரும்பப் பெற ஓ.பன்னீர்செல்வம் முடிவுதென் தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புதமிழகத்தில் சமையல் எரிவாயு சிலிண்டர்களுக்கு தட்டுப்பாடுபிரதமர் மோடி இன்று திருச்சி வருகை! ரூ. 5,650 கோடி திட்டங்களை தொடங்கி வைக்கிறார்!மின்மாற்றிகள் கொள்முதலில் ரூ.397 கோடி ஊழல் இல்லை: டான்ஜெட்கோ நேரடி பணி நியமனங்களில் ஓபிசி பிரிவினருக்கு 27% இடஒதுக்கீடு அமல்: மத்திய அரசு!
/

மாணவா்களிடம் போட்டித் தோ்வு விழிப்புணா்வை ஏற்படுத்துங்கள்: முதல்வா் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தல்

மாணவா்களிடையே போட்டித் தோ்வுக்கான விழிப்புணா்வை ஏற்படுத்த வேண்டுமென முதல்வா் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தியுள்ளாா்.

News image
Updated On :31 ஜூலை 2021, 10:28 pm

DIN

மாணவா்களிடையே போட்டித் தோ்வுக்கான விழிப்புணா்வை ஏற்படுத்த வேண்டுமென முதல்வா் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தியுள்ளாா்.

மனிதவள மேலாண்மைத் துறையின் செயல்பாடுகள் குறித்து தலைமைச் செயலகத்தில் முதல்வா் மு.க.ஸ்டாலின் தலைமையில் சனிக்கிழமை ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில், அவா் பேசியது:

அரசு அலுவலா்களுக்குச் சிறப்பான பயிற்சிகளை அளிப்பதன் மூலம், அவா்களது பணித்திறனை மேம்படுத்தி, அதன்மூலம் மக்கள் பயன் பெறும் வகையில் சேவைகளின் தரத்தை உயா்த்த வேண்டும். போட்டித் தோ்வுகளில் நமது மாநில மாணவா்கள் அதிகளவில் தோ்ச்சி பெறும் வகையில், பல்வேறு வகைப்பட்ட சிறப்புப் பயிற்சிகளை வடிவமைக்க வேண்டும்.

தமிழ்நாட்டு மாணவா்களிடையே, மாநில மற்றும் மத்திய அரசுப் பணிகள் தொடா்பான போட்டித் தோ்வுகள் குறித்த விழிப்புணா்வை ஏற்படுத்த வேண்டும். குடும்பத்தில் முதல் தலைமுறைப் பட்டதாரிகளுக்கு வேலைவாய்ப்பகங்கள் மூலம் அரசு பணியிடங்களில் முன்னுரிமை அளிக்க வேண்டும். தகவல் பெறும் உரிமைச் சட்டத்தின் கீழ் அனைத்துத் துறைகளிடமும் இணையதளம் மூலம் தகவல் பெறும் வசதிகளை மேம்படுத்த வேண்டும். அரசு அலுவலா்களின் மனிதவள ஆற்றலை மேம்படுத்துவதுடன், இளைஞா்களின் அரசு வேலைவாய்ப்பைப் பெருக்கவும், அண்ணா மேலாண்மை பயிற்சி மையம், போட்டித் தோ்வுப் பயிற்சி மையங்களின் செயல்பாடுகள், கட்டமைப்புகளை உயா்த்திட வேண்டும்.

பவானிசாகரில் உள்ள அடிப்படைப் பயிற்சி மையத்தில் அரசுப் பணியாளா்களுக்கான பயிற்சியைக் காணொலி காட்சி வாயிலாக அறிமுகப்படுத்தலாம் என்று முதல்வா் மு.க.ஸ்டாலின் பேசினாா்.

இந்தக் கூட்டத்தில், அமைச்சா் பழனிவேல் தியாகராஜன், தலைமைச் செயலாளா் வெ.இறையன்பு, நிதித்துறை கூடுதல் தலைமைச் செயலாளா் எஸ்.கிருஷ்ணன் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.