தங்கம் விலை சவரனுக்கு ரூ. 1,600 உயர்வு! வெள்ளி கிலோ ரூ. 10,000 உயர்ந்தது!பனையூரில் தவெக வேட்பாளர்களுடன் விஜய் சந்திப்பு!புதுச்சேரி சிறுமி பாலியல் கொலை வழக்கில் தீர்ப்பு! மே 1: ஞாயிறு அட்டவணைப்படி மெட்ரோ ரயில் இயக்கம்!
/

பிளஸ் 2 பொதுத்தேர்வு: இரு நாள்களில் முடிவு என அமைச்சர் தகவல்

பிளஸ் 2 பொதுத்தேர்வு தொடர்பாக அனைவரிடமும் கருத்து கேட்டு 2 நாள்களில் முடிவு எடுக்கப்படும் என்று அன்பில் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்துள்ளார்.

News image

அன்பில் மகேஷ் பொய்யாமொழி

Updated On :2 ஜூன் 2021, 6:32 am

பிளஸ் 2 பொதுத்தேர்வு தொடர்பாக அனைவரிடமும் கருத்து கேட்டு 2 நாள்களில் முடிவு எடுக்கப்படும் என்று அன்பில் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்துள்ளார்.

பிளஸ் 2 பொதுத்தேர்வு குறித்து மாணவர்கள், கல்வியாளர்கள், பெற்றோர்கள் உள்பட அனைவரிடமும் அடுத்த 2 நாள்களுக்கு கருத்துகள் கேட்கப்படும் என்றும்,

கருத்துக்களின் அடிப்படையில் பொதுத்தேர்வை நடத்துவதா? அல்லது ரத்து செய்வதா என்பது குறித்து முதல்வருடன் ஆலோசித்து நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தெரிவித்தார். 

சிபிஎஸ்இ 12-ம் வகுப்பு பொதுத்தேர்வு ரத்து செய்யப்பட்ட நிலையில், மாநிலப் பாடத்திட்டத்தில் 12-ம் வகுப்பு பொதுத்தேர்வை ரத்து செய்வது தொடர்பாக முதல்வர் மு.க.ஸ்டாலினுடன் இன்று (ஜூன்2) காலை ஆலோசனை நடைபெற்றது. 

ஆலோசனைக்குப் பிறகு செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்ததாவது,

மாநிலப் பாடத்திட்டத்தில் 12-ம் வகுப்பு பொதுத்தேர்வை ரத்து செய்வது தொடர்பாக கருத்து கேட்டு அதன் அடிப்படையில் முடிவு எடுக்க திட்டமிட்டுள்ளோம்.

12-ம் வகுப்பு பொதுத்தேர்வு குறித்து மாணவர்கள், கல்வியாளர்கள், பெற்றோர்கள், மருத்துவ வல்லுநர்கள் உள்பட அனைவரிடமும் அடுத்த 2 நாள்களுக்கு கருத்துகள் கேட்கப்படும்.

பெறப்படும் கருத்துக்களின் அடிப்படையில் பொதுத்தேவை நடத்துவதா? அல்லது ரத்து செய்வதா என்பது குறித்து முதல்வருடன் ஆலோசித்து நடவடிக்கை எடுக்கப்படும்.

பொதுத்தேர்வு குறித்து அனைத்து தரப்பினரும் கருத்து தெரிவிக்கும் வகையில் மின்னஞ்சல் மற்றும் தொலைப்பேசி எண் விரைவில் அறிவிக்கப்படும். பிற மாநிலங்கள் எடுக்கும் நிலைப்பாடு உள்ளிட்டவற்றை கருத்தில் கொண்டும் முடிவு எடுக்கப்படும்.

மேலும், தேர்வை விட மாணவர்களின் உடல் நலம் மற்றும் ஆரோக்கியம் முக்கியம் என்று ஆலோசனையின்போது முதல்வர் ஸ்டாலின் கூறியுள்ளார் என்று அன்பில் மகேஷ் தெரிவித்தார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.