மேற்கு வங்க தோ்தல்: பாஜக வேட்பாளா்கள் அறிவிப்பு! கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுசிறந்த திரைப்படம் உள்பட 6 ஆஸ்கர் விருதுகளை வென்ற ஒன் பேட்டில் ஆஃப்டர் அனதர்!ஒளிப்பதிவுக்கான சிறந்த ஆஸ்கர் விருது பெற்ற முதல் பெண்!தமிழக தேர்தல்: கட்சி பிரதிநிதிகளுடன் தலைமைத் தேர்தல் அதிகாரி ஆலோசனை!சிபிஐ கட்சியிலிருந்து நீக்கப்பட்ட எம்எல்ஏ முகுந்தன் பாஜகவில் இணைவு!மத்திய அரசுப் பள்ளிகளில் 13,000 ஆசிரியர் பணியிடங்கள் காலியாக உள்ளன: கல்வித்துறைபோர் காரணமாக 4,335 இந்திய விமானங்கள் ரத்து!கேரளத் தேர்தல்: 47 வேட்பாளர்கள் அடங்கிய பாஜகவின் முதல் பட்டியல் வெளியீடு!எழுத்தாளர் ச.தமிழ்ச்செல்வனுக்கு சாகித்ய அகாதெமி விருது
/

கீழையூர் அருகே தமுமுக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்

கீழையூர் அருகேயுள்ள திருப்பூண்டியில் தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம் சார்பில் குடியுரிமை திருத்தச் சட்டத்தை அமல்படுத்த முயன்று வரும் மத்திய அரசைக் கண்டித்து புதன்கிழமை கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்ற

News image
கீழையூர் அருகே தமுமுக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்
Updated On :2 ஜூன் 2021, 10:04 am

DIN

கீழையூர் அருகேயுள்ள திருப்பூண்டியில் தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம் சார்பில் குடியுரிமை திருத்தச் சட்டத்தை அமல்படுத்த முயன்று வரும் மத்திய அரசைக் கண்டித்து புதன்கிழமை கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகத்தின் திருப்பூண்டி கிளை சார்பாக ஊராட்சி மன்ற அலுவலகம் முன்பாக நடைபெற்ற கண்டன ஆர்ப்பாட்டத்திற்கு மாநில விவசாய அணி பொருளாளர் ஓ.எஸ். இப்ராஹிம் தலைமை வகித்து கண்டன உரை நிகழ்த்தினார்.

இதில் ஒன்றியச் செயலாளர் என்.சர்புதீன், ஒன்றிய துணைச் செயலாளர் பி.அமிர் அப்பாஸ், கிளைத் தலைவர் கே.நிஜாமுதீன், மாவட்ட வழக்கறிஞர் அணியை சேர்ந்த முகம்மது மன்சூர் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

கரோனா பெருந்தொற்று உலகத்தையே அச்சுறுத்தி வரும் நிலையில், மத்திய அரசு குடியுரிமை திருத்தச் சட்டத்தை அமல்படுத்த முயன்று வருவதை கண்டித்து கண்டன கோஷங்கள் எழுப்பப்பட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.