பங்குச்சந்தை: சென்செக்ஸ், நிஃப்டி கடும் சரிவு! ரூ. 9.5 லட்சம் கோடி இழப்பு!சசிகலாவின் தென்னந்தோப்பு சின்னத்தை இதற்கு முன் வைத்திருந்த கட்சி?சிலிண்டர் தட்டுப்பாடு! கவலையில் கேட்டரிங் நிறுவனங்கள்!இந்திய ரூபாயின் மதிப்பு 92.44 ஆகச் சரிவு!எரிபொருள் தட்டுப்பாடு! எதிர்க்கட்சிகள் அமளியால் மக்களவை ஒத்திவைப்பு!அதிமுகவில் இணைந்தார் காளியம்மாள்! மாநில அந்துஸ்து தராவிட்டால் கூட்டணி இல்லை! பாஜகவுக்கு என்.ஆர். காங்கிரஸ் அழுத்தம்?எரிபொருள் தட்டுப்பாடு! 17 கோடி பீப்பாய் கச்சா எண்ணெய் விடுவித்தது அமெரிக்கா!தென் மாவட்டங்களில் இன்றுமுதல் ஓபிஎஸ் பிரசாரம்!வேளச்சேரி - பரங்கிமலை இடையே பறக்கும் ரயில் சேவை: நாளை முதல் தொடக்கம்
/

கரோனா பயமா? ஒரே குடும்பத்தைச் சேர்ந்த  3 பேர் தூக்கிட்டு தற்கொலை

சென்னையை அடுத்த திருமுல்லைவாயில் பகுதியில் காய்ச்சல் பயணம் காரணமாக ஒரு குடும்பத்தைச் சேர்ந்த 3 பேர் தூக்கிட்டு தற்கொலை செய்துள்ள சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்பத்தியுள்ளது.

News image
Updated On :3 ஜூன் 2021, 4:52 am

DIN


சென்னை:  சென்னையை அடுத்த திருமுல்லைவாயில் பகுதியில் காய்ச்சல் பயணம் காரணமாக ஒரு குடும்பத்தைச் சேர்ந்த 3 பேர் தூக்கிட்டு தற்கொலை செய்துள்ள சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்பத்தியுள்ளது.

திருமுல்லைவாயில் சோழம்பேடு சாலை பகுதியில் மனைவி மல்லிகேஸ்வரி(64), மகள் நாகேஸ்வரியுடன்(34) வசித்து வந்தவர் தில்லி(74). இவர் முத்தா புதுப்பேட்டையை அடுத்த பாலவெட்டில் விவசாயம் பார்த்து வந்துள்ளார். தற்போது கரோனா பொதுமுடக்கம் காரணமாக வேலை எதுவும் இல்லாததால் வருமானமின்றி இருந்துள்ளார். 

இந்நிலையில், இவர்கள் மூவருக்கும் கடந்து ஒருவாரமாக காய்ச்சல் இருந்துள்ளது. இதையடுத்து அந்த பகுதியில் உள்ள மருத்துமனைக்கு சென்றும் மருந்து வாங்கி சாப்பிட்டு வந்துள்ளனர்.

இந்தநிலையில் அவர்களுக்கு காய்ச்சல் அதிகமானதால் கரோனா பாதித்திருக்குமோ என்ற அச்சத்தில் புதன்கிழமை இரவு மூவரும் தனித்தனியாக தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளதாக கூறப்படுகிறது. 

தகவல் அறிந்து சம்பவ  இடத்திற்கு வந்த திருமுல்லைவாயில் காவல்துறையினர் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கேஎம்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். 

தற்கொலைக்கு கரோனா பாதிப்புதான் காரணமா? அல்லது குடும்ப பிரச்னை காரணமா? என்ற கோணத்தில் காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.