தங்கம் விலை சவரனுக்கு ரூ. 1,600 உயர்வு! வெள்ளி கிலோ ரூ. 10,000 உயர்ந்தது!பனையூரில் தவெக வேட்பாளர்களுடன் விஜய் சந்திப்பு!பனையூரில் தவெக வேட்பாளர்களுடன் விஜய் சந்திப்பு! புதுச்சேரி சிறுமி பாலியல் கொலை வழக்கில் தீர்ப்பு! மே 1: ஞாயிறு அட்டவணைப்படி மெட்ரோ ரயில் இயக்கம்!சென்னையில் வாக்கு எண்ணிக்கை பணியில் ஈடுபடுவோருக்கு பயிற்சி முகாம்!விஜய் - சங்கீதா விவாகரத்து வழக்கை விசாரித்த நீதிபதி பணியிட மாற்றம்!
/

'அப்பாவின் நாற்காலி காலியாக இருந்தாலும் நினைவுகளால் நிரம்பி வழிகின்றன' - கனிமொழி

அப்பாவின் நாற்காலி காலியாக இருந்தாலும் அவை நினைவுகளால் நிரம்பி வழிகின்றன என்று கருணாநிதி குறித்து கனிமொழி பதிவிட்டுள்ளார். 

News image
Updated On :3 ஜூன் 2021, 5:34 am

அப்பாவின் நாற்காலி காலியாக இருந்தாலும் அவை நினைவுகளால் நிரம்பி வழிகின்றன என்று கருணாநிதி குறித்து கனிமொழி பதிவிட்டுள்ளார். 

மறைந்த முன்னாள் முதல்வரும், திமுக முன்னாள் தலைவருமான கருணாநிதியின் பிறந்தநாள் இன்று திமுகவினரால் வெகு சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது. 

அரசியல் தலைவர்கள் பலரும் அவரை நினைவு கூர்ந்து பதிவிட்டு வருகின்றனர். 

இந்நிலையில், கருணாநிதியின் மகளும், தூத்துக்குடி தொகுதி மக்களவை உறுப்பினருமான கனிமொழி தனது தந்தையை நினைவுகூர்ந்துள்ளார். 

இதுகுறித்து அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், 'அறை முழுவதும் மகிழ்ச்சியும் நகைச்சுவையும் அறிவும் நிறையச்செய்யும் அப்பாக்களின் நாற்காலிகள் காலியாக இருந்தாலும் அவை நினைவுகளால் நிரம்பி வழிகின்றன' என்று பதிவிட்டுள்ளார். மேலும் கருணாநிதியுடன் இருக்கும் தன்னுடைய புகைப்படத்தையும் தற்போது காலியாக இருக்கும் அவரது நாற்காலியின் புகைப்படத்தையும் இணைத்து பதிவிட்டுள்ளார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.