தமிழகத்தில் கரோனா தொற்றுக்கு மிக விரைவில் முற்றுப்புள்ளி: மா. சுப்பிரமணியன்
தமிழகத்தில் அமல்படுத்தப்பட்ட ஊரடங்கு காரணமாகவே கரோனா பரவல் தடுக்கப்பட்டுள்ளது என்று மருத்துவத் துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.


சென்னை: தமிழகத்தில் அமல்படுத்தப்பட்ட ஊரடங்கு காரணமாகவே கரோனா பரவல் தடுக்கப்பட்டுள்ளது என்று மருத்துவத் துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.
சென்னையில் இன்று செய்தியாளர்களை சந்தித்து பல்வேறு விஷயங்கள் குறித்து விளக்கம் அளித்திருக்கும் அமைச்சர் மா. சுப்பிரமணியன், மருத்துவர்களின் பணி நியமனம் மற்றும் பணியிட மாறுதல்கள் வெளிப்படைத் தன்மையுடன் நடைபெறும். இதில் எந்த முறைகேடும் நடைபெற வாய்ப்பில்லாத வகையில் நடைமுறைகளில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. எனவே, மருத்துவ நியமனங்களில் எந்த முறைகேடும் நடைபெறாது என்று கூறினார்.
மேலும், தமிழகத்தில் கடந்த கரோனா பரவலின் போது மதுபானக் கடைகள் திறக்கப்பட்டிருந்தன. ஆனால் தற்போது கடைகள், தொழிற்சாலைகள் மூடப்பட்டிருப்பது போல மதுபானக் கடைகளும் மூடப்பட்டுள்ளன.
தமிழகத்தில் முழு ஊரடங்கால் பெரும்பலன் கிடைத்துள்ளது. கரோனா பரவல் கட்டுப்படுத்தப்பட்டுள்ளது. தமிழகத்தில் கரோனா தொற்றுக்கு மிக விரைவில் முற்றுப்புள்ளி வைக்கப்படும் என்று தெரிவித்துள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...